கஷ்டப்படுத்த போகும் செவ்வாய்.. ஏழரை உள்ளே வருகிறது.. சிக்கி தவிக்கப் போகும் ராசிகள் இவர்கள்தான்
Zodiac signs: மீன ராசியில் ராகு பகவான் பயணம் செய்து வருகின்றார். அவரோடு செவ்வாய் பகவான் இணைந்துள்ளார். பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும்தாக்கத்தை கொடுத்தாலும் ஒரு சில ராசிகள் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். இவர் தன்னம்பிக்கை, விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். 45 நாட்களுக்கு ஒரு முறை செவ்வாய் பகவான் தனது இடத்தை மாற்றுவார்.
இதனால் 12 ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். செவ்வாய் பகவான் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். இதுவரை கும்ப ராசிக்கு பயணம் செய்து வந்த செவ்வாய் பகவான் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி அன்று மீன ராசியில் நுழைந்தார்.
ஏற்கனவே மீன ராசியில் ராகு பகவான் பயணம் செய்து வருகின்றார். அவரோடு செவ்வாய் பகவான் இணைந்துள்ளார். பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும்தாக்கத்தை கொடுத்தாலும் ஒரு சில ராசிகள் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
சிம்ம ராசி
உங்கள் ராசிகள் எட்டாவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான சவால்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. மற்றவர்களிடம் பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்களுடைய வார்த்தைகளில் கவனம் இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் பணிச்சுமை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வியாபாரத்தில் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. நிதி ரீதியாக நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
கன்னி ராசி
உங்கள் ராசியில் எட்டாவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு குடும்பத்தில் சிக்கல்கள் ஏற்படாது வாய்ப்பு உள்ளது. மற்றவர்களிடம் பேசும்போது வாக்குவாதம் ஏற்படக்கூடும். நீண்ட தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது. பயணங்கள் நல்ல பலன்களை பெற்று தராது. உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். உயர் அலுவலர்களோடு கருத்து வேறுபாடு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. புதிய தொழில் தொடங்குவதற்கு இது சரியான தருணம் கிடையாது. மிகவும் பொறுமையாக இருக்க வேண்டும். இல்லை என்றால் நிதி ரீதியாக நீங்கள் இழப்பு சந்திக்க நேரிடும். தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது.
மகர ராசி
உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான தடைகள் ஏற்படாது வாய்ப்பு உள்ளது. எதிர்மறை எண்ணங்கள் உருவாகுவதற்கான சூழ்நிலைகள் அதிகம் உள்ளது. சிறிய வேலை முடிப்பதற்கும் சற்று தாமதமாகும். குடும்ப உறுப்பினர்களோடு பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். வெளியே செல்லும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வார்த்தைகளில் கவனமாக இல்லை என்றால் சிக்கல்கள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் மந்தமான சூழ்நிலை உண்டாகும். தொழிலில் பெரிய லாபம் கிடைக்காது. உடல் ஆரோக்கியத்தில் தனி கவனம் செலுத்தி உங்களை நீங்கள் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். பெற்றோருடன் பேசும் போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9