தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Daridra Yoga Bad Luck: தரித்திரத்தில் சிக்கிய ராசிகள்.. கண்ணீரில் கதறவிடும் செவ்வாய்.. மோசமான காலம் தான் இது

Daridra Yoga Bad Luck: தரித்திரத்தில் சிக்கிய ராசிகள்.. கண்ணீரில் கதறவிடும் செவ்வாய்.. மோசமான காலம் தான் இது

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 04, 2024 11:41 AM IST

Bad Luck: செவ்வாய் பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இதுவரை மீன ராசிகள் பயணம் செய்து வந்த செவ்வாய் பகவான் ஜூன் ஒன்றாம் தேதி அன்று தனது சொந்தமான ராசியான மேஷ ராசியில் நுழைந்தார். இதன் காரணமாக தரித்திர யோகம் உருவாகியுள்ளது.

தரித்திரத்தில் சிக்கிய ராசிகள்.. கண்ணீரில் கதறவிடும் செவ்வாய்.. மோசமான காலம் தான் இது
தரித்திரத்தில் சிக்கிய ராசிகள்.. கண்ணீரில் கதறவிடும் செவ்வாய்.. மோசமான காலம் தான் இது

செவ்வாய் பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இதுவரை மீன ராசிகள் பயணம் செய்து வந்த செவ்வாய் பகவான் ஜூன் ஒன்றாம் தேதி அன்று தனது சொந்தமான ராசியான மேஷ ராசியில் நுழைந்தார். இதன் காரணமாக தரித்திர யோகம் உருவாகியுள்ளது. இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதனால் சிக்கலை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

தரித்திர யோகம் உங்களுக்கு வாழ்க்கையில் பல்வேறு விதமான சிக்கல்களை ஏற்படுத்த கூடும். எடுக்கும் வேலைகள் அனைத்தும் உங்களுக்கு முடிவடைவதற்கு சற்று தாமதமாகும். வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உங்களுடைய எதிர்பார்ப்புகள் நிறைவேறுவதற்கு சற்று தாமதமாகும். 

உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நிதி ரீதியாக நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதிக பணம் செலவு செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வேலை செய்யும் இடத்தில் தகவல் ஊழியர்களோடு பேசும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

மிதுன ராசி

தரித்திர யோகம் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்களை உருவாக்குவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. வேலை செய்யும் இடத்தில் கடின உழைப்பு கொடுத்தாலும் உங்களுக்கு வரவேற்பு கிடைப்பது சற்று குறைவாகவே இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் தற்போது முடிவு செய்யாமல் இருப்பது நல்லது. 

குடும்பத்தில் மற்றவர்களிடம் பேசும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வாழ்க்கைத் துணையோடு வாக்குவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மற்றவர்களிடம் பேசும்போது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வியாபாரத்தில் சற்று மந்தமான சூழ்நிலை உண்டாகும். தொழிலில் மிகப்பெரிய முன்னேற்றம் இருக்காது. மொத்தத்தில் இந்த காலம் உங்களுக்கு மிகவும் போராட்ட காலமாக இருக்கும் எனவே எச்சரிக்கையாக இருங்கள்.

கடக ராசி

தரித்திர யோகம் உங்களுக்கு பல்வேறு விதமான சங்கடங்களை ஏற்படுத்த கூடும். எடுத்த காரியங்கள் முடிவதற்கு சற்று தாமதமாகும். நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பெரிய அளவில் நீங்கள் நஷ்டத்தை பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. உறவினர்களுடன் மனக்கசப்பை ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். தேவையில்லாமல் கோபப்படுவதை தவிர்ப்பது நல்லது. 

வாழ்க்கையில் பல்வேறு விதமான சிக்கல்கள் உங்களுக்கு வந்தாலும் நீங்கள் மிகவும் பொறுமையாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். வேலை செய்யும் இடத்தில் மற்றவர்களோடு பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தொழில் ரீதியாக பெரிய முன்னேற்றம் இருக்காது கவனமாக இருங்கள்.

கன்னி ராசி

தரித்திர யோகம் உங்களுக்கு மிகவும் சிறப்பாக செயல்பட போகின்றது. கை நிறைய பணம் வந்தாலும் உங்களுக்கு சேமிப்பு என்பது சிறிதளவு கூட இருக்காது. தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. வேலை செய்யும் இடத்தில் பல்வேறு விதமான சிக்கல்களை நீங்கள் சந்திக்க நேரிடும். 

உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். புதிய முதலீடுகளை தவிர்ப்பது மிகவும் நல்லது. நிதி இழப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இல்லாவிட்டால் நீங்கள் மிகப்பெரிய நஷ்டத்தை சந்திக்க நேரிடும். மொத்தத்தில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel