தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lord Surya: சூரியன் பணப்பெட்டியை திறந்து விட்டார்.. கதவை திறக்க வேண்டிய ராசிகள்.. ராஜயோகம் யாருக்கு?

Lord Surya: சூரியன் பணப்பெட்டியை திறந்து விட்டார்.. கதவை திறக்க வேண்டிய ராசிகள்.. ராஜயோகம் யாருக்கு?

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 23, 2024 04:10 PM IST

Lord Surya: மிதுன ராசி புதன் பகவானின் சொந்தமான ராசி என்பதால் அதனுடைய தாக்கம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். சூரியன் மற்றும் புதன் இவர்கள் இருவரும் நட்பு கிரகங்கள் என்ற காரணத்தினால் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர்.

சூரியன் பணப்பெட்டியை திறந்து விட்டார்.. கதவை திறக்க வேண்டிய ராசிகள்.. ராஜயோகம் யாருக்கு?
சூரியன் பணப்பெட்டியை திறந்து விட்டார்.. கதவை திறக்க வேண்டிய ராசிகள்.. ராஜயோகம் யாருக்கு?

Lord Surya: நவகிரகங்களில் தலைவனாக விளங்கக்கூடியவர் சூரிய பகவான். இவர் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்த வருகின்றார். நவகிரகங்களின் உச்ச அதிகாரம் கொண்ட கிரகமாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். இவர் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ஒரு மாத காலம் எடுத்துக் கொள்கிறார். சூரிய பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்லும் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது.

இந்நிலையில் சூரிய பகவான் கடந்த ஜூன் 15ஆம் தேதியன்று புதன் பகவானின் மிதுன ராசியில் நுழைந்தார். மிதுன ராசி புதன் பகவானின் சொந்தமான ராசி என்பதால் அதனுடைய தாக்கம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். சூரியன் மற்றும் புதன் இவர்கள் இருவரும் நட்பு கிரகங்கள் என்ற காரணத்தினால் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.

மிதுன ராசி

உங்கள் ராசியில் முதல் வீட்டில் சூரிய பகவான் பயணம் செய்து வருகிறார். இதனால் உங்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும் சமூகத்தில் மதிப்பு அதிகரிக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். தொழில் ரீதியாக உங்களுக்கு நல்ல முன்னேற்றங்கள் இருக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணமானவர்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும். நண்பர்களால் உதவி கிடைக்கும். உறவினர்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

சிம்ம ராசி

உங்கள் ராசியில் 11-வது வீட்டில் சூரிய பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு வருமானத்தில் நல்ல உயர்வு இருக்கும் புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். குழந்தைகளால் உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும். அரசியல் தொழிலில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பளம் உயர்வு கிடைக்கக்கூடும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் இருப்பவர்களால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். உறவினர்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.

கன்னி ராசி

உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் சூரிய பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் தொழில் மற்றும் வியாபாரத்தில் சாதகமான பலன் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழில் ரீதியான முக்கிய முடிவுகள் உங்களுக்கு முன்னேற்றத்தை பற்றி தரும். நிதி ரீதியாக உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். விரும்பிய இடமாற்றம் உங்களுக்கு கிடைக்கும். வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு நண்பர்களால் உதவி கிடைக்கும். உறவினர்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9