தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Money Luck: சுழற்றி சுற்றி சுற்றி அடிக்கும் செவ்வாய்.. கண்ணீர் விட்டு கதறி ஓடும் ராசிகள்.. நீங்க இருக்கீங்களா?

Money Luck: சுழற்றி சுற்றி சுற்றி அடிக்கும் செவ்வாய்.. கண்ணீர் விட்டு கதறி ஓடும் ராசிகள்.. நீங்க இருக்கீங்களா?

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 26, 2024 03:20 PM IST

Lord Mars: செவ்வாய் பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் செவ்வாய் பகவான் தனது சொந்தமான ராசியான மேஷ ராசிகள் நுழைந்துள்ள காரணத்தினால் சில ராசிகள் சிரமத்தை சந்திக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து காணலாம்.

சுழற்றி சுற்றி சுற்றி அடிக்கும் செவ்வாய்.. கண்ணீர் விட்டு கதறி ஓடும் ராசிகள்.. நீங்க இருக்கீங்களா?
சுழற்றி சுற்றி சுற்றி அடிக்கும் செவ்வாய்.. கண்ணீர் விட்டு கதறி ஓடும் ராசிகள்.. நீங்க இருக்கீங்களா?

செவ்வாய் பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் செவ்வாய் பகவான் தனது சொந்தமான ராசியான மேஷ ராசிகள் நுழைந்துள்ள காரணத்தினால் சில ராசிகள் சிரமத்தை சந்திக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து காணலாம்.

மகர ராசி

உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பணவரவில் ஏற்படும். சிக்கல்கள் அதிகமாகும். நிதி நிலைமையில் பெரிய முன்னேற்றம் இருக்காது.

வியாபாரம் மந்தமாக இருக்கும். தொழிலில் அந்த அளவிற்கு லாபம் இருக்காது. குடும்பத்தில் அவ்வப்போது சண்டைகள் ஏற்படக்கூடும். வாழ்க்கை துணையோடு உங்களுக்கு போராட்டங்கள் இருக்கும். கணவன் மனைவி இடையே சச்சரவுகள் ஏற்படக்கூடும். மற்றவர்களிடம் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள வேண்டும். மருத்துவமனை செலவுகள் அதிகரிக்க கூடிய சூழ்நிலைகள் அதிகம் உள்ளது எனவே நீங்கள் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

கன்னி ராசி

உங்கள் ராசியில் செவ்வாய் பகவான் எட்டாவது வீட்டில் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உயர் அலுவலர்களோடு வாக்குவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. சக ஊழியர்களோடு பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். 

உறவினர்களால் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. நிதி நிலைமையில் பெரிய முன்னேற்றம் இருக்காது. பணவரவில் மிகப்பெரிய தாமதம் இருக்கும். வியாபாரம் மந்தமாக இருக்கும். தொழிலில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பெரிய முன்னேற்றம் இருக்காது. நண்பர்களோடு பழகும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உறவினர்களால் உங்களுக்கு சங்கடங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

மேஷ ராசி

உங்கள் ராசிகள் 12வது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு கண் சம்பந்தப்பட்ட சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. உடல் ஆரோக்கியத்தை தனிப்பட்ட கவனம் செலுத்தி பார்த்துக்கொள்ள வேண்டும். மற்றவர்களிடம் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். திருமண வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. காதல் வாழ்க்கையில் அவ்வப்போது சண்டைகள் ஏற்படக்கூடும். 

குடும்பத்தினரிடம் சச்சரவுகள் ஏற்படக்கூடும். உயர் அலுவலர்களிடம் வாக்குவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. சக ஊழியர்களோடு பேசும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் பணி சுமை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. நிதி நிலைமையில் பெரிய முன்னேற்றம் இருக்காது. அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைப்பதற்கு சற்று தாமதமாகும். கூட்டுத்தொழில் முயற்சிகளில் தற்போது இயங்குவது நல்லது கிடையாது. புதிய முதலீடுகளை தற்போது தவிர்ப்பது நல்லது

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9