Shani Transit: சனி சைக்கிளில் ஏறிய சூரியன்.. வாடகை வீடு இனி மாடி வீடு.. வானம் வரை வாழபோவது யார் யார்?.. யோகம் வருகிறது-let us see about the zodiac signs that will be happy in saturn and surya yoga - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Shani Transit: சனி சைக்கிளில் ஏறிய சூரியன்.. வாடகை வீடு இனி மாடி வீடு.. வானம் வரை வாழபோவது யார் யார்?.. யோகம் வருகிறது

Shani Transit: சனி சைக்கிளில் ஏறிய சூரியன்.. வாடகை வீடு இனி மாடி வீடு.. வானம் வரை வாழபோவது யார் யார்?.. யோகம் வருகிறது

Suriyakumar Jayabalan HT Tamil
Aug 11, 2024 09:49 AM IST

zodiac signs: சூரியன் மற்றும் சனி ஒருவரை ஒருவர் நோக்கும் பொழுது சம சப்தக யோகம் உருவாக உள்ளது. இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு சொர்க்க வாழ்க்கையை கொடுக்கப் போகின்றது. அது எந்த ராசிகள் என்பது குறித்து காணலாம்.

 சனி சைக்கிளில் ஏறிய சூரியன்.. வாடகை வீடு இனி மாடி வீடு.. வானம் வரை வாழபோவது யார் யார்?.. யோகம் வருகிறது
சனி சைக்கிளில் ஏறிய சூரியன்.. வாடகை வீடு இனி மாடி வீடு.. வானம் வரை வாழபோவது யார் யார்?.. யோகம் வருகிறது

நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து இரட்டிப்பாக திருப்பி கொடுக்கின்ற காரணத்தினால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்தமான ராசிக்கான கும்ப ராசிகள் சனிபகவான் பயணம் செய்திருக்கின்றார்.

நவகிரகங்களில் உச்ச அதிகாரம் கொண்ட கிரகமாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் வருகின்ற 16ஆம் தேதி அன்று சூரிய பகவான் சிம்ம ராசியில் தனது பயணத்தை தொடங்குகிறார்.

சூரியன் மற்றும் சனி அந்தந்த ராசிகளில் பயணம் செய்து வந்தாலும் 180 டிகிரி இடைவெளியில் தங்களது பயணத்தை மேற்கொள்கின்றனர். இதனால் இரண்டு கிரகங்களும் ஒருவரை ஒருவர் நோக்கும் பொழுது சம சப்தக யோகம் உருவாக உள்ளது. இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு சொர்க்க வாழ்க்கையை கொடுக்கப் போகின்றது. அது எந்த ராசிகள் என்பது குறித்து காணலாம்.

கடக ராசி

சூரியன் மற்றும் சனி யோகம் ஆனது உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு மகத்தான வெற்றி கிடைக்கப் போகின்றது. உங்களுடைய சொத்து மதிப்பு அதிகரிக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் நண்பர்கள் உதவி கிடைக்கும். உறவினர்களால் ஏற்பட்டுவது சிக்கல்கள் அனைத்தும் குறையும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக குறையும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும்.

சிம்ம ராசி

சனி மற்றும் சூரியன் கொடுக்கின்ற யோகம் உங்களுக்கு சிறப்பான பலன்களை பெற்று தர போகின்றது. உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். பல்வேறு விதமான சிக்கல்கள் உங்களுக்கு குறைந்து முன்னேற்றம் ஏற்படும். புதிய திட்டங்கள் உங்களுக்கு நல்ல தொடக்கமாக அமையும். மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும். தொழிலில் புதிய முதல் இன்று முதல் உங்களுக்கு நல்ல லாபத்தை பெற்று தரும். வியாபாரத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். கூட்டு துணியில் முயற்சிகள் உங்களுக்கு நல்ல யோகத்தை பெற்று தரும். பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கப்படும்.

தனுசு ராசி

உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சூரியன் மற்றும் சனி யோகத்தை உருவாக்கியுள்ளனர். இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை ஆதரவு முழுமையாக கிடைக்கும். உங்கள் அனைத்து முயற்சிகளும் வெற்றியை கொடுக்கும். உயர் கல்விக்காக மாணவர்கள் வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது, கல்விகள் மாணவர்கள் சிறந்து விளங்குவார்கள். சமுதாயத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கக்கூடும். மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பழைய நண்பர்களால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும். அனைத்து காரியங்களிலும் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். மற்றவர்களிடத்தில் ஆதரவு அதிகரிக்கும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9