MONEY: கும்ப ராசியில் நுழையும் ராகு.. வாழ்ந்து காட்டப் போகும் ராசிகள்.. தடையில்லாமல் பணம் கொட்டும்
Lord Rahu: ராகு பகவான் வருகின்ற 2025 ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி மீன ராசியில் இருந்து விலகி கும்ப ராசிக்கு செல்கிறார். ராகு பகவானின் இந்த இடமாற்றம் பல ராசிகளுக்கு சாதகமாக அமைந்தாலும் ஒரு சில ராசிகள் யோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Lord Rahu: நவகிரகங்களில் அசுப நாயகனாக விளங்க கூடியவர் ராகு பகவான். ராகு மற்றும் கேது எப்போதும் இணைபிரியாத கிரகங்களாக திகழ்ந்து வருகின்றனர். வெவ்வேறு ராசிகளில் பயணம் செய்தாலும் இவர்களுடைய செயல்பாடு ஒரே மாதிரி இருக்கும். அந்த வகையில் கடந்தாண்டு அக்டோபர் மாத இறுதியில் ராகு பகவான் மீன ராசியில் நுழைந்தார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார் அவர் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார்.
இது போன்ற போட்டோக்கள்
Mar 27, 2025 05:16 PMGuru: 2025-ல் பணத்தை அள்ளிக் கொடுக்க வருகிறார் குரு.. இந்த ராசிகள் வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்க போகுதா?
Mar 27, 2025 05:09 PMகிரகண யோகம்: 2027 வரை சனி விடமாட்டார்.. இந்த ஆண்டு முதல் யோகம் பெறுகின்ற ராசிகள்.. யார் அந்த ராசி?
Mar 27, 2025 12:03 PMLove Horoscope : உங்கள் துணை இன்று அதிக பதட்டமாக உணரலாம்.. 12 ராசிக்கும் இன்று காதல் வாழ்க்கை எப்படி இருக்கு? இதோ
Mar 27, 2025 11:06 AMவருகிற 29-ம் தேதி அபூர்வ சூரிய கிரகணம்.. இந்த ராசிகளுக்குப் பிரச்னைகள் ஏற்படலாம்.. பண விஷயத்தில் மிக மிக கவனம் தேவை!
Mar 27, 2025 10:27 AMGuru Luck Rasis: கோடி கோடியாக கொட்ட வருகிறாரா குரு?.. பணத்தை அள்ளிக் கொள்ளப் போகும் ராசிகள் நீங்கள் தானா?
Mar 27, 2025 10:22 AMMoney Luck: அள்ளிக் கொடுக்க வருகின்றார் செவ்வாய்.. ஜாக்பாட்டில் சிக்கிய ராசிகள்.. வியாபார வளர்ச்சி யாருக்கு?
சனிபகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக ராகு பகவான் விளங்கி வருகின்றார். ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ராகு பகவான் 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார்.
ஜோதிட ரீதியாக மீன ராசியில் பயணம் செய்து வரும் ராகு பகவான் வருகின்ற 2025 ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி மீன ராசியில் இருந்து விலகி கும்ப ராசிக்கு செல்கிறார். ராகு பகவானின் இந்த இடமாற்றம் பல ராசிகளுக்கு சாதகமாக அமைந்தாலும் ஒரு சில ராசிகள் யோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
மேஷ ராசி
ராகு பகவானின் அனுகூலமான பலன்கள் உங்களுக்கு கிடைக்கப் போகின்றது. அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்றுத் தரும். பெற்றோரின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். உங்களுக்கு காரியத்தில் இருந்த தடைகள் அனைத்தும் விலகும். மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும்.
எதிர்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். ராகு பகவான் உங்களுக்கு பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றத்தை கொடுப்பார். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
மகர ராசி
ராகு பகவானின் சஞ்சாரம் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகளை கொடுக்கப்போகின்றது. இதுவரை நிலுவையில் உள்ள பணம் அனைத்தும் உங்களை வந்து சேரும். திடீரென எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். நிறுத்தப்பட்ட வேலைகள் அனைத்தும் மீண்டும் தொடங்கும்.
நீண்ட காலம் நிதி சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் விலகும். வாழ்க்கையில் பல்வேறு விதமான ஏற்றத்தாழ்வுகள் உங்களுக்கு தற்போது முன்னேற்றத்தை பெற்று தரும். புதிய வாய்ப்புகளால் உங்களுக்கு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் அனைத்தும் கிடைக்கும். 2025 வரை அனைத்து வழிகளில் இருந்தும் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும்.
கும்ப ராசி
ராகு பகவானின் அதிர்ஷ்டம் உங்களுக்கு சிறப்பாக கிடைக்கப் போகின்றது. சனிபகவானின் சொந்தமான ராசி என்பதால் உங்களுக்கு வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கப் போகின்றது. எதிர்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். குடும்பத்தில் ஏற்பட்டு வந்த சண்டை மற்றும் சச்சரவுகள் நிவர்த்தி அடையும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம். உங்களுக்கு கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் அமையும். சொந்த வாழ்க்கையில் உங்களுக்கு மகிழ்ச்சி மற்றும் அமைதி அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். பங்குச்சந்தை முதலீடுகள் உங்களுக்கு நல்ல லாபத்தை பெற்று தரும். எதிர்பார்த்ததை விட உங்களுக்கு அனைத்து காரியங்களிலும் நல்ல லாபம் கிடைக்கும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9
