Rahu 2026 Luck: என்னப்பா ராகு இவ்வளவு செய்வாரா?.. ஆச்சரியத்தில் ஆழ்ந்த ராசிகள்.. இனி ஜாலிதான் போங்க..
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Rahu 2026 Luck: என்னப்பா ராகு இவ்வளவு செய்வாரா?.. ஆச்சரியத்தில் ஆழ்ந்த ராசிகள்.. இனி ஜாலிதான் போங்க..

Rahu 2026 Luck: என்னப்பா ராகு இவ்வளவு செய்வாரா?.. ஆச்சரியத்தில் ஆழ்ந்த ராசிகள்.. இனி ஜாலிதான் போங்க..

Suriyakumar Jayabalan HT Tamil
Published Aug 25, 2024 01:34 PM IST

Rahu 2026 Luck: ராகு பகவானின் பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு யோகத்தை கொடுக்கப் போகின்றது. அதில் எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Rahu 2026 Luck: என்னப்பா ராகு இவ்வளவு செய்வாரா?.. ஆச்சரியத்தில் ஆழ்ந்த ராசிகள்.. இனி ஜாலிதான் போங்க..
Rahu 2026 Luck: என்னப்பா ராகு இவ்வளவு செய்வாரா?.. ஆச்சரியத்தில் ஆழ்ந்த ராசிகள்.. இனி ஜாலிதான் போங்க..

இது போன்ற போட்டோக்கள்

ராகு பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். சனிபகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக ராகு பகவான் விளங்கி வருகின்றார். அதனால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். கடந்தாண்டு அக்டோபர் மாத இறுதியில் ராகு பகவான் மீன ராசியில் நுழைந்தார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். இதனுடைய தாக்கம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும்.

ராகு பகவான் வருகின்ற 2025 ஆம் ஆண்டு மே மாதம் 18ம் தேதி அன்று மீன ராசியில் இருந்து விலகி கும்ப ராசிக்கு செல்கிறார். வருகின்ற 2026 ஆம் ஆண்டு நவம்பர் 24ஆம் தேதி வரை இதே ராசியில் பயணம் செய்வார். ராகு பகவானின் பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு யோகத்தை கொடுக்கப் போகின்றது. அதில் எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மேஷ ராசி

ராகு பகவான் பல சிறப்பான பலன்களை உங்களுக்கு கொடுக்கப் போகின்றார். நேர்மறையான மாற்றங்கள் உங்களுக்கு அதிகமான பலன்களை கொடுக்கும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும். பெற்றோர்களின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். தடைப்பட்டு கிடந்த காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.

மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும். உங்களின் அனைத்து விருப்பங்களும் நிறைவேறும். அரசாங்கத்தின் உதவிகள் முழுமையாக கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றம் இருக்கும். பணவரவியல் எந்த குறையும் இருக்காது.

மகர ராசி

ராகு பகவானின் சஞ்சாரம் உங்களுக்கு பல வழிகளில் நல்ல பலன்களை பெற்று தரும். இழந்த பணத்தை திரும்ப பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். திடீரென உங்களது பணம் உங்களைத் தேடி வரும். நிறுத்தப்பட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். புதிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். நீண்ட காலம் நிதி சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் விலகும்.

பணவரவில் எந்த குறையும் இருக்காது. மிக நிலைமையில் உங்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த ஏற்றத்தாழ்வுகள் அனைத்தும் நீங்கும். வெளியூர் பயணங்கள் நல்ல பலன்களை பெற்றுத் தரும். அனைத்து வழிகளிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும்.

கும்ப ராசி

உங்கள் ராசியில் ராகு பகவான் அற்புதமான பலன்களை அள்ளிக் கொடுக்கப் போகின்றார். இது சனி பகவானின் ராசி என்கின்ற காரணத்தினால் உங்களுக்கு அனைத்து வகையான மாற்றங்களும் முன்னேற்றம் பெறும். குடும்பத்தில் இருந்து சண்டை மற்றும் சச்சரவுகள் விலகும். தொழிலில் நல முன்னேற்றம் இருக்கும்.

வியாபார வாழ்க்கையில் உங்களுக்கு மகிழ்ச்சி மற்றும் முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்க கூடும். பங்குச்சந்தை முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். சிந்திக்காமல் எந்த செலவையும் செய்யாமல் இருப்பது நல்லது.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்