தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lord Mercury: புதன் 3 ராசிகளுக்கு பணமழை வீசப் போகிறார்.. ராஜ வாழ்க்கையில் மூழ்கும் ராசிகள்.. அதிர்ஷ்டம் தேடி வருகுது

Lord Mercury: புதன் 3 ராசிகளுக்கு பணமழை வீசப் போகிறார்.. ராஜ வாழ்க்கையில் மூழ்கும் ராசிகள்.. அதிர்ஷ்டம் தேடி வருகுது

Suriyakumar Jayabalan HT Tamil
Jul 11, 2024 02:11 PM IST

Lord Mercury: சூரியன் மற்றும் புதன் இவர்கள் இருவரும் நட்பு கிரகங்களாக திகழ்ந்து வருகின்றனர். புதன் பகவானின் சிம்ம ராசி பயணம் ஆனது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு யோகத்தை கொடுக்க போகின்றது அது எந்தெந்த ராசிகள் என்பது காணலாம்.

புதன் 3 ராசிகளுக்கு பணமழை வீசப் போகிறார்.. ராஜ வாழ்க்கையில் மூழ்கும் ராசிகள்.. அதிர்ஷ்டம் தேடி வருகுது
புதன் 3 ராசிகளுக்கு பணமழை வீசப் போகிறார்.. ராஜ வாழ்க்கையில் மூழ்கும் ராசிகள்.. அதிர்ஷ்டம் தேடி வருகுது

Lord Mercury: நவகிரகங்களின் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான். இவர் நரம்பு, வியாபாரம், கல்வி, புத்திசாலித்தனம், படிப்பு, பேச்சு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக புகழ்ந்து வருகின்றார். இவர் மிதுன மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். புதன் பகவான் தற்போது கடக ராசியில் பயணம் செய்து வருகின்றார்.

மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர் புதன் பகவான் இவர் வருகின்ற ஜூலை 19ஆம் தேதி அன்று சிம்ம ராசியில் நுழைகின்றார் இது சூரிய பகவானின் சொந்தமான ராசியாகும். சூரியன் மற்றும் புதன் இவர்கள் இருவரும் நட்பு கிரகங்களாக திகழ்ந்து வருகின்றனர். புதன் பகவானின் சிம்ம ராசி பயணம் ஆனது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு யோகத்தை கொடுக்க போகின்றது அது எந்தெந்த ராசிகள் என்பது காணலாம்.

சிம்ம ராசி 

உங்கள் ராசியில் முதல் வீட்டில் புதன் பகவான் பயணம் செய்த போகின்றார் இதனால் உங்களுக்கு ஆளுமை திறன் அதிகரிக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்திற்கு நல்ல லாபம் கிடைக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். எடுத்துக் கொண்ட காரியங்கள் உங்களுக்கு சிறப்பாக முடிவடையும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். 

திட்டமிட்ட வேலைகள் உங்களுக்கு முன்னேற்றத்தை பெற்று தரும். திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். நண்பர்களால் உதவி கிடைக்கும்.

மிதுன ராசி

உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்யப் போகின்றார். இதனால் உங்களுக்கு மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும். வணிகத்தில் நல்ல முன்னேற்றம். இருக்கும். போட்டி தேர்வுகளில் மாணவர்கள் சிறந்து விளங்குவார்கள். 

எதிர்பாராத நேரத்தில் அதிக லாபம் கிடைக்கும். தொழில்நுற்றும் வியாபாரத்தில் உங்களுக்கு சிறப்பான முன்னேற்றம் இருக்கும். உடன்பிறந்தவர்களின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.

கும்ப ராசி

புதன் பகவான் உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் பயணம் செய்யப்போகின்றார்கள். ஆனால் உங்களுக்கு எதிர் பாராத நேரத்தில் பணவரவு இருக்கும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே இனிமையான சூழ்நிலைகள் உண்டாக்கும். கூட்டு தொழில் முயற்சிகள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும். 

வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வருமானத்தில் நல்ல உயர்வு கிடைக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். நண்பர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9