பத்ர ராஜயோகம் ஜூன் மாதம் வருகிறது.. புதனின் அதிர்ஷ்டத்தில் நனையும் 3 ராசிகள்.. நீங்க என்ன ராசி?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  பத்ர ராஜயோகம் ஜூன் மாதம் வருகிறது.. புதனின் அதிர்ஷ்டத்தில் நனையும் 3 ராசிகள்.. நீங்க என்ன ராசி?

பத்ர ராஜயோகம் ஜூன் மாதம் வருகிறது.. புதனின் அதிர்ஷ்டத்தில் நனையும் 3 ராசிகள்.. நீங்க என்ன ராசி?

Suriyakumar Jayabalan HT Tamil
May 30, 2024 09:43 AM IST

Lord Mercury: மிதுன ராசியில் நுழையும் புதன் பகவான் பத்ர ராஜ யோகத்தை உருவாக்குகிறார். இந்த ராஜயோகத்தின் தாக்கம் ஆனது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். இருப்பினும் வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை இது ஏற்படுத்தப் போகின்றது.

பத்ர ராஜயோகம் ஜூன் மாதம் வருகிறது.. புதனின் அதிர்ஷ்டத்தில் நனையும் 3 ராசிகள்.. நீங்க என்ன ராசி?
பத்ர ராஜயோகம் ஜூன் மாதம் வருகிறது.. புதனின் அதிர்ஷ்டத்தில் நனையும் 3 ராசிகள்.. நீங்க என்ன ராசி?

அனைத்து கிரகங்களும் நன்மைகளைக் கொடுக்கும் கிரகங்களாக இருந்தாலும் அந்தந்த கிரகங்கள் இருக்கும். இடத்தை பொறுத்து சுப மற்றும் அசுப பலன்கள் கிடைக்கின்றன. இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். அந்த வகையில் புதன் பகவான் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு வருகின்ற ஜூன் மாதம் 14ஆம் தேதி அன்று மாறப் போகிறார்.

மிதுன ராசியில் நுழையும் புதன் பகவான் பத்ர ராஜ யோகத்தை உருவாக்குகிறார். இந்த ராஜயோகத்தின் தாக்கம் ஆனது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். இருப்பினும் வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை இது ஏற்படுத்தப் போகின்றது. அந்த வகையில் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கும் ராசிகளை இங்கே காண்போம்.

மிதுன ராசி

மிதுன ராசியில் நுழையும் புதன் பகவானால் உங்களுக்கு பத்ர ராஜயோகம் மதர்ஷத்தின் ஆதரவு கிடைக்கப் போகின்றது. இதனால் உங்களுக்கு தொழிலில் சாதகமான பலன்கள் கிடைக்கும். எதிர்பார்த்த அனைத்தும் உங்களைத் தேடி வரும். புதிய வேலை வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். சிறப்பான பலன்கள் உங்களுக்கு கிடைக்கப் போகின்றது. 

வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வெளியூர் பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும். வணிகத்தில் உங்களுக்கு அதிகமான பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். நிதி நிலைமையில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். இது அதிர்ஷ்டமான காலமாக உங்களுக்கு அமையும். வெளிநாடு செல்பவர்களுக்கு வாய்ப்புகள் அதிகமாக கிடைக்கும்.

சிம்ம ராசி

புதன் பகவானின் பத்ர ராஜயோகம் உங்களுக்கு அதிர்ச்சத்தை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும் புதன் பகவானின் சஞ்சாரம் உங்களுக்கு நல்ல யோகத்தை கொடுக்கும் பயணங்கள் நல்ல பலன்களை பெற்று தரும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பெரிய சாதனைகள் செய்யக்கூடிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் பதிவு உயர்வு மற்றும் சம்பளம் உயர்வு பெறக்கூடும். 

வியாபாரத்தில் பல்வேறு ஒப்பந்தங்கள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். நீண்ட தூர பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும். இந்த காலத்தில் உங்களுக்கு லாபம் ஏற்றுவதற்கான வாய்ப்புகள் தொழில் மூலம் கிடைக்கும். அதிக பணம் சேமிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வெளிநாட்டில் பணம் சம்பாதிக்க சென்றவர்களுக்கு நல்ல யோகம் கிடைக்கும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்றுத் தரும். உடல் ஆரோக்கியத்தில் சிறப்பான சூழ்நிலை அமையும் .

மகர ராசி

புதன் பத்ர ராஜயோகம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவை கொடுக்கப் போகின்றது. பணவரவில் ஏற்பட்ட வந்து சிக்கல்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறையும். புதிய முயற்சிகள் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு அதிகம் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் உங்களுக்கு சாதகமான சூழ்நிலை உண்டாகும். போட்டியில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். கல்வியில் மாணவர்கள் சிறந்து விளங்குவார்கள்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

 

Whats_app_banner