தமிழ் செய்திகள்  /  Astrology  /  Let Us See About The Zodiac Signs That Will Be Blessed By Lord Mars

Money Luck: செவ்வாய் உதயத்தால் பிரகாசமாக போகும் ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Feb 04, 2024 03:57 PM IST

செவ்வாய் பகவானால் அதிர்ஷ்டத்தில் நனைய போகும் ராசிகள் குறித்து காண்போம்.

செவ்வாய் பெயர்ச்சி
செவ்வாய் பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை, தைரியம், விடாமுயற்சி, வீரம், உள்ளிட்டவைகளுக்கு காரணியாக விளங்கி வருகிறார். செவ்வாய் பகவானின் ராசி மாற்றமானது 12 ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் செவ்வாய் பகவான் தற்போது தனுசு ராசியில் பயணம் செய்து வருகின்றார்.

கடந்த ஜனவரி 17ஆம் தேதி அன்று செவ்வாய் பகவான் தனுசு ராசியில் உதயமானார். பிப்ரவரி 5ஆம் தேதி அதாவது நாளை வரை இதே நிலையில் பயணம் செய்கின்றார். இதனால் சுப பலன்களை பெறப்போகும் ராசிகளை இங்கே காண்போம்.

மேஷ ராசி

 

செவ்வாய் பகவான் உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் உதயமாகின்றார். உங்களுக்கு பல்வேறு விதமான அனுபவங்கள் கிடைக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். நீண்ட நாட்கள் விரும்பிய வேலை உங்களுக்கு கிடைக்கும். பல்வேறு விதமான வாய்ப்புகள் உங்களை மகிழ்ச்சி படுத்தும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். காரிய தடைகள் அனைத்தும் விலகும்.

மிதுன ராசி

 

செவ்வாய் பகவான் உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் உதயம் ஆகின்றார். வேலை செய்யும் இடத்தில் சாதகமான சூழ்நிலை உண்டாகும். முன்னேற்றத்திற்கான நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உங்களுக்காக அமையும். மேலும் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது தொழிலில் நல்ல லாபம் ஈட்டும் நிலை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.

கடக ராசி

 

செவ்வாய் பகவான் உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் உதயமாகின்ற காரணத்தினால் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சி அதிகரிக்கும். மனைவியுடன் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும். கணவன் மனைவிக்கிடையே அன்புகர்கள் அதிகரிக்கும். பெற்றோரின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் சில ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டாலும் காலம் போக குறைந்து விடும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். செலவுகளை கட்டுப்படுத்தினால் முன்னேற்றம் உண்டாகும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.