சும்மா நிக்காதீங்க.. சுக்கிரன் வேட்டை ஆரம்பம்.. தனுசு ராசியால் யோகம் பெறும் ராசிகள் நீங்கதான்..
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  சும்மா நிக்காதீங்க.. சுக்கிரன் வேட்டை ஆரம்பம்.. தனுசு ராசியால் யோகம் பெறும் ராசிகள் நீங்கதான்..

சும்மா நிக்காதீங்க.. சுக்கிரன் வேட்டை ஆரம்பம்.. தனுசு ராசியால் யோகம் பெறும் ராசிகள் நீங்கதான்..

Suriyakumar Jayabalan HT Tamil
Published Oct 23, 2024 12:01 PM IST

Lord Venus: சுக்கிரனின் தனுசு ராசி பலன் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் ராஜயோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

சும்மா நிக்காதீங்க.. சூரியன் வேட்டை ஆரம்பம்.. தனுசு ராசியால் யோகம் பெறும் ராசிகள் நீங்கதான்..
சும்மா நிக்காதீங்க.. சூரியன் வேட்டை ஆரம்பம்.. தனுசு ராசியால் யோகம் பெறும் ராசிகள் நீங்கதான்..

இது போன்ற போட்டோக்கள்

அந்த வகையில் நவம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் சுக்கிரன் தனுசு ராசிக்கு செல்கிறார். சுக்கிரனின் தனுசு ராசி பலன் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் ராஜயோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

தனுசு ராசி

உங்கள் ராசியில் சுக்கிர பகவான் நவம்பர் மாதத்தில் நுழைகின்றார். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகள் கிடைக்கும். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு சிறப்பான முன்னேற்றம் இருக்கும். எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். நினைத்ததை முடிப்பதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். நிதி நன்மைகள் உங்களுக்கு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. நண்பர்களால் உதவி கிடைக்கும். 

உறவினர்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும் தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் ஈடுபட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். வியாபாரத்தில் பெரிய வெற்றி கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும்.

மேஷ ராசி

சுக்கிர பகவானின் சஞ்சாரத்தால் உங்களுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டம் கிடைக்கப் போகின்றது வீட்டில் மங்கள காரியங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. உங்களுக்கு சுப பலன்கள் அனைத்தும் கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். நிதி நன்மைகள் நல்ல முன்னேற்றம் இருக்கும். பண வரவில் இருந்த குறையும் இருக்காது. மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். 

எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். புதிய திட்டங்கள் உங்களுக்கு ஏற்றவாறு அமையும் சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பேச்சு திறமையால் காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும்.

விருச்சிக ராசி

சுக்கிர பகவானின் பயணம் உங்களுக்கு சிறப்பாக அமைந்துள்ளது. நிதி ஆதாயம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. உங்களுடைய பேச்சுத் திறமையால் காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். நிதி ரீதியான பலன்கள் உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். பொருளாதார ரீதியாக உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். சேமிப்பு மற்றும் பணவரவு உங்களுக்கு அதிகரிக்கும். 

வாழ்வில் சுப போகங்கள் உங்களுக்கு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வியாபாரத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலை விரிவு படுத்தக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கைகூடும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.