தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  August Luck: விபரீத விளையாட்டு தொடங்கிய சூரியன்.. மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிகளுக்கும் ரெடி!

August Luck: விபரீத விளையாட்டு தொடங்கிய சூரியன்.. மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிகளுக்கும் ரெடி!

Suriyakumar Jayabalan HT Tamil
Jul 08, 2024 03:49 PM IST

Lord Surya: சூரிய பகவான் தற்போது வருகின்ற ஜூலை 16ஆம் தேதி அன்று கடக ராசியில் சஞ்சாரம் செய்ய உள்ளார். வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை இதே ராசியில் பயணம் செய்வார். சூரிய பகவானின் இடமாற்றத்தால் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர்.

விபரீத விளையாட்டு தொடங்கிய சூரியன்.. மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிகளுக்கும் ரெடி!
விபரீத விளையாட்டு தொடங்கிய சூரியன்.. மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிகளுக்கும் ரெடி!

நவகிரகங்களின் செயல்பாடுகள் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். நவகிரகங்களின் அரசனாக திகழ்ந்துவரும் சூரிய பகவானின் இடமாற்றம் மிகவும் முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. சூரிய பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ஒரு மாத காலம் எடுத்துக் கொள்கிறார். இந்த காலகட்டத்தில் தமிழ் மாதம் பிறக்கின்றது.

அந்த வகையில் சூரிய பகவான் தற்போது வருகின்ற ஜூலை 16ஆம் தேதி அன்று கடக ராசியில் சஞ்சாரம் செய்ய உள்ளார். வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை இதே ராசியில் பயணம் செய்வார். சூரிய பகவானின் இடமாற்றத்தால் அனைத்து ராசிகளுக்கும் சாதகமான பலன்கள் கிடைத்தாலும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

சிம்ம ராசி

உங்கள் ராசியில் சூரிய பகவானின் இடமாற்றம் பல்வேறு விதமான நன்மைகளை கொடுக்கப் போகின்றது. தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல பலன்கள் கிடைக்கக்கூடும். வணிகத்தின் வருமானம் அதிகரிக்க கூடும். எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். 

அனைத்து துறைகளிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் கிடைக்கும். பணம் உங்களுக்கு அதிகமாக கிடைக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் சக ஊழியர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள்.

விருச்சிக ராசி

சூரிய பகவானின் இடமாற்றம் உங்களுக்கு நல்ல நல்ல பலன்களை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. வியாபாரத்தில் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பங்குச்சந்தை முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். 

வெளியூர் செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். பயணங்கள் நல்ல பலன்களை பெற்று தரும். வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும். எடுத்துக்கொண்ட காரியங்கள் உங்களுக்கு சிறப்பான வெற்றிகளை பெற்று தரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.

மீன ராசி

சூரிய பகவான் உங்களுக்கு பொன்னான யோகத்தை அள்ளிக் கொடுக்கப் போகின்றார். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். அதிக பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். பெற்றோரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். நிதி நிலைமை உங்களுக்கு பலமாக மாறும். 

தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்கள் உங்களுக்கு உச்சத்தில் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். செல்வ செழிப்பிற்கு எந்த குறையும் இருக்காது. காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9