Money Luck: நாளை ஜாக்பாட் அடிக்க போகும் ராசிகள்.. புதன் பின்னாடி போகப் போகிறார்.. சிம்ம ராசியில் கொட்டும் பணமழை
Lord Mercury: ஆகஸ்ட் 5ஆம் தேதி அன்று அதாவது நாளை சிம்ம ராசியில் வக்கிர நிலை அடைகிறார் புதன் பகவான். புதன் பகவானின் வக்கிர நிலை அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு யோகத்தை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து காணலாம்.
Lord Mercury: நவகிரகங்களில் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான். இவர் நரம்பு, படிப்பு, வியாபாரம், கல்வி, புத்திசாலித்தனம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக நிகழ்ந்திருக்கின்றார். மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர் புதன் பகவான். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
மிகச் சிறிய கிரகமாக இருந்தாலும் இவருடைய தாக்கம் மிகப் பெரிய அளவில் இருக்கும். புதன் பகவான் ஒருவருடைய ஜாதகத்தில் நல்ல நிலைமையில் இருந்தால் அவர்களுக்கு வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
அந்த வகையில் புதன் பகவான் கடந்த ஜூலை 19ஆம் தேதி அன்று சிம்ம ராசியில் நுழைந்தார். ஆகஸ்ட் 5ஆம் தேதி அன்று அதாவது நாளை சிம்ம ராசியில் வக்கிர நிலை அடைகிறார் புதன் பகவான். புதன் பகவானின் வக்கிர நிலை அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு யோகத்தை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து காணலாம்.
மிதுன ராசி
புதன் பகவான் உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் வக்கிரம் அடைகிறார். இதனால் உங்களுக்கு எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும்.
வேலை தொடர்பான பயணங்கள் நல்ல பலன்களை பெற்று தரும். வாழ்க்கையில் நன்மைகள் அதிகம் கிடைக்கும். வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும். நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் முடிவடையும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். பணம் தொடர்பான சிக்கல்கள் அனைத்தும் முடிவுக்கு வரும் நிறைய செல்வம் சேரும்.
துலாம் ராசி
உங்கள் ராசியில் 11-வது வீட்டில் புதன் வக்கிர நிலை அடைகிறார். இதனால் உங்களுக்கு இலக்கை அடையக்கூடிய வழிகள் சுலபமாகும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வழக்கத்தை விட மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் முன்னேற்றம் அதிகரிக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்றுத்தரும். வியாபாரத்தில் எதிர்பாராத நேரத்தில் லாபம் அதிகரிக்கும் காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.
தனுசு ராசி
உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் புதன் வக்ர நிலை அடைகிறார். இதனால் வேலை தொடர்பான விஷயங்களில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். வெளிநாட்டு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். நிறைய பணம் சம்பாதிக்க கூடிய சூழ்நிலைகள் அமையும். மிதி ரீதியாக உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.
வெற்றியின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழில் புதிய முதலீடுகள் நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். அனைத்து காரியங்களிலும் உங்களுக்கு லாபம் கிடைக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9
தொடர்புடையை செய்திகள்