தமிழ் செய்திகள்  /  Astrology  /  Let Us See About The Zodiac Signs That Guru Bhagavan Is Going To Give

Guru Luck: குரு கொட்டும் யோகத்தில் நுழைய போகும் ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Feb 03, 2024 03:49 PM IST

குருபகவான் அள்ளிக் கொடுக்கப் போகும் ராசிக்காரர்கள் குறித்து காண்போம்.

 குரு பெயர்ச்சி
குரு பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

அந்த வகையில் குரு பகவான் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். இவருடைய இடமாற்றம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். குருபகவான் எப்போதும் நல்ல பலன்களை தான் கொடுப்பார். அவருடைய இடமாற்றத்தை பொறுத்து அசுப மற்றும் சுப பலன்கள் உருவாகின்றன.

தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வரும் குரு பகவான் வரும் மே ஒன்றாம் தேதி அன்று ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார். இதனுடைய இடமாற்றம் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் அதிர்ஷ்டத்தின் யோகத்தை பெறுகின்ற ராசிகளை இங்கே காண்போம்.

மேஷ ராசி

 

குருபகவான் இந்த ஆண்டு உங்களுக்கு சுப பலன்களை கொடுக்கப் போகின்றார். பணவரவில் எந்த குறையும் இருக்காது. புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். பணவரவிற்கான புதிய வழிகள் உங்களுக்கு திறக்கும். எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். 

வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பணவரவில் தற்போது அதிக முன்னேற்றம் இருக்கும். அனைத்து விதமான வசதிகளும் உங்களுக்கு கிடைக்கும். குடும்பத்தின் மகிழ்ச்சியாக இருக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.

மிதுன ராசி

 

குருபகவானால் உங்களுக்கு அனைத்து விதமான வசதிகளும் கிடைக்கப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும். முன்னோர்களின் சொத்துக்களில் ஆதாயம் கிடைக்கும். நினைத்த காரியம் அனைத்தும் நிறைவேறும். 

கடின உழைப்பு நல்ல பலன்கள் பெற்று தரும். திடீரென நிதி ஆதாயமும் கிடைக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.

சிம்ம ராசி

 

குருபகவான் தாக்கத்தால் உங்களுக்கு இந்த முறை நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் தொழில் அதிகம் முன்னேற்றம் இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் வெற்றிகரமாக முடிவடையும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். 

புதிய திட்டங்கள் உங்களுக்கு ஆதரவாக அமையும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். நிதி ஆதாயத்திற்கான வாய்ப்புகள் அதிகமாக நல்ல வருமானம் உண்டாகும். ஆசைகள் அனைத்தும் நிறைவேறும் வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.

டாபிக்ஸ்