Rasi Palan: பணம் பெருக்கெடுத்து ஓடும் ராசிகள்.. புதன் அதிர்ஷ்ட ராசிகள் இவர்கள்தான்.. உங்களுக்கு மகிழ்ச்சி
Lord Mercury: சிம்ம ராசியில் புதன் பகவானின் வக்கிர நிலை அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு பணயோகம் கிடைக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
zodiac signs: நவகிரகங்களில் இளவரசன் பதவியை வகித்து வருபவர் புதன் பகவான். இவர் மிகவும் குறுகிய காலத்தில் தனக்கு இடத்தை மாற்றக்கூடியவர். இவர் படிப்பு, வியாபாரம், புத்திசாலித்தனம், பேச்சு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்த வருகின்றார். புதன் பகவான் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றினாலும் இவருடைய தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் பெரியதாக இருக்கும்.
புதன் பகவான் ஒருவருடைய ஜாதகத்தில் நல்ல நிலைமையில் இருந்தால் அவர்களுக்கு வியாபாரத்தில் பல்வேறு விதமான யோகங்கள் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் கடந்த ஜூலை 19ஆம் தேதி அன்று சிம்ம ராசியில் நுழைந்தார். ஆகஸ்ட் 5ஆம் தேதி அன்று சிம்ம ராசியில் வக்கிர நிலை அடைந்தார்.
சிம்ம ராசியில் புதன் பகவானின் வக்கிர நிலை அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு பணயோகம் கிடைக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
தனுசு ராசி
உங்கள் ராசிகள் ஒன்பதாவது வீட்டில் புதன் பகவான் வக்ர நிலை அடைந்துள்ளார். இதனால் உங்களுக்கு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். நிறைய பணம் சம்பாதிக்க கூடிய சூழ்நிலைகள் உண்டாகும். நிதி ரீதியாக உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். நிறைய பணத்தை உங்களால் சேமிக்க முடியும்.
வெற்றியின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். வியாபாரத்தில் மற்றும் தொழிலில் புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். புதிய வாய்ப்புகளால் நல்ல முன்னேற்றம் இருக்கும். மற்றவர்களிடத்தில் அன்பும் ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.
துலாம் ராசி
உங்கள் ராசியில் 11 வது வீட்டில் புதன் வக்கிர நிலை அடைந்துள்ளார். இதனால் உங்களுக்கு இலக்கை அடையக்கூடிய சூழ்நிலைகள் அனைத்தும் சுலபமாக அமையும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். புதிய வேலைவாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். புதிய முதலீடுகளால் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கை துணையும் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். பணத்தை சேமிக்க கூடிய சூழ்நிலைகள் அனைத்தும் உண்டாகும்.
மிதுன ராசி
உங்கள் ராசியில் மூன்றாவது பெட்டில் புதன் வக்கிர நிலை அடைந்துள்ளார். இதனால் உங்களுக்கு எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். நீண்ட நாட்களாக முயற்சி செய்து வந்த காரியங்கள் அனைத்தும் சாதகமாக முடிவடையும். தொழில் ரீதியாக உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.
கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்றுத் தரும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். நன்மைகள் உங்களைத் தேடி வரும். வியாபாரத்தில் அதிக லாபம் உங்களுக்கு கிடைக்கும். நிலுவையில் உள்ள தொகைகள் உங்களைத் தேடி வரும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9
தொடர்புடையை செய்திகள்