காலங்களில் வசந்தம் தரும் புதன்.. பூர்த்தி செய்யும் ராசிகள்.. யோகராசிகள் யார்?.. யாருக்கு வாழ்க்கை?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  காலங்களில் வசந்தம் தரும் புதன்.. பூர்த்தி செய்யும் ராசிகள்.. யோகராசிகள் யார்?.. யாருக்கு வாழ்க்கை?

காலங்களில் வசந்தம் தரும் புதன்.. பூர்த்தி செய்யும் ராசிகள்.. யோகராசிகள் யார்?.. யாருக்கு வாழ்க்கை?

Suriyakumar Jayabalan HT Tamil
Published Nov 09, 2024 05:45 PM IST

Lord Mercury: புதன் பகவானின் உதயம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் ராஜ யோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

காலங்களில் வசந்தம் தரும் புதன்.. பூர்த்தி செய்யும் ராசிகள்.. யோகராசிகள் யார்?.. யாருக்கு வாழ்க்கை?
காலங்களில் வசந்தம் தரும் புதன்.. பூர்த்தி செய்யும் ராசிகள்.. யோகராசிகள் யார்?.. யாருக்கு வாழ்க்கை?

இது போன்ற போட்டோக்கள்

புதன் பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். புதன் பகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாத அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். தற்போது புதன் பகவான் துலாம் ராசியில் பயணம் செய்து வருகின்றார்.

கடந்த அக்டோபர் 22ஆம் தேதி அன்று புதன் பகவான் துலாம் ராசியில் உதயமானார். புதன் பகவானின் உதயம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் ராஜ யோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மிதுன ராசி

புதன் பகவானின் உதயத்தால் உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி மற்றும் அமைதி நிறைந்திருக்கும் அனைத்து முயற்சிகளும் உங்களுக்கு வெற்றியை தேடி தரும். பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். நிதி ஆதாயங்கள் பெறுவதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு அதிகம் கிடைக்கும். 

புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு அதிகம் கிடைக்கும். வியாபாரத்தில் பெரிய லாபம் கிடைக்கக்கூடும். நிதி நிலைமையில் உங்களுக்கு சேமிப்புகள் அதிகரிக்கப்படும். நிதி பாதுகாப்பை உறுதி செய்யக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். நண்பர்களால் உதவி கிடைக்கும். உறவினர்களால் ஏற்பட்ட வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும்.

கன்னி ராசி

புதன் பகவானின் உதயம் உங்களுக்கு யோகத்தை பெற்று தர போகின்றது. குடும்பத்தில் வளர்ச்சி அதிகரிக்கும். உங்களுடைய முதலீடு நல்ல லாபத்தைப் பெற்றுத் தரப்படும். குடும்ப பொறுப்புகளில் உங்களுக்கு அர்ப்பணிப்பு அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். 

பணி நிமித்தமாக நீங்கள் நீண்ட தூர பயணம் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்க நினைத்தால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கக்கூடும். மன ஆரோக்கியம் அதிகரிக்கும் உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்ட வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவு திருமணம் கைகூடும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.