Tamil News  /  Astrology  /  Let Us See About The Zodiac Signs That Get Pana Yoga Due To Transit Of Venus

Lord Venus: அதிரடி விளையாட்டை தொடங்கினார் சுக்கிரன்.. யோக ராசிக்காரர்கள் இவர்கள்தான்

Suriyakumar Jayabalan HT Tamil
Feb 13, 2024 11:03 AM IST

Venus: சுக்கிரனின் நட்சத்திர இடமாற்றத்தால் பண யோகத்தை பெறுகின்ற ராசிகள் குறித்து காண்போம்.

 சுக்கிர பெயர்ச்சி
சுக்கிர பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

சுக்கிரனின் அனைத்து விதமான இடமாற்றங்களும் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இவர் அழகு, காதல், ஆடம்பரம், செல்வம், செழிப்பு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.

தனுசு ராசியில் பயணம் செய்து வந்த சுக்கிர பகவான் பிப்ரவரி 12ஆம் தேதி அன்று மகர ராசியில் நுழைந்தார். இதனால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். வரும் பிப்ரவரி 20ஆம் தேதி அன்று திருவோணம் நட்சத்திரத்திற்குள் நுழைகின்றார்.

சுக்கிரனின் நட்சத்திர இடம் மாற்றத்தால் 12 ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் ஒரு சில ராசிகள் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. சுக்கிரனின் திருவோண நட்சத்திர இடமாற்றத்தால் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிகளை இங்கே காண்போம்.

மேஷ ராசி

 

சுக்கிரன் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றது. ஒவ்வொரு துறையிலும் நல்ல வெற்றி கிடைக்கும். நீதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். வாழ்க்கை துணையுடன் உறவு மேம்படும். வணிக ரீதியாக பணம் சம்பாதிக்க கூடிய சூழ்நிலைகள் உண்டாகும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

தனுசு ராசி

 

சுக்கிரனின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு நல்ல யோகத்தை கொடுக்கப் போகின்றது. பணவரவு எந்த குறையும் இருக்காது. வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நீண்ட நாள் சிக்கல்கள் விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். வீடுகளில் வசதிகள் அதிகரிக்கும் அனைத்து துறைகளிலும் நல்ல வெற்றி கிடைக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை கிடைக்கும்.

கும்ப ராசி

 

சுக்கிரனின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றது. ஏனென்றால் ஏற்கனவே சனி பகவான் உங்கள் ராசியில் பயணம் செய்து வருகின்றார். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். லாபம் தரக்கூடிய நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். குழந்தைகளால் உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும். பணவரவில் எந்த குறையும் இருக்காது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.