Nakshatra Transit: பொங்கி எழுந்த சூரியன்.. திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி.. இந்த ராசிகள் கோலாகலம்.. அதிர்ஷ்டம் வரும்
Lord Sun: சூரிய பகவானின் பூச நட்சத்திர பயணம் ஆனது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் குறிப்பிட்ட சில ராசிகள் யோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Lord Sun: நவகிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது உள்ளத்தை மாற்றக்கூடியவர். இவர் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். சூரிய பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசியில் இடம் மாறும் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது.
இது போன்ற போட்டோக்கள்
May 13, 2025 05:27 PMசனி கொட்டிக் கொடுக்க வருவார்.. பண மழை கொட்டி தீர்க்கும் ராசிகள்.. முன்னேற்றம் வருவது யாருக்கு?
May 13, 2025 02:08 PMகுரு பெயர்ச்சி.. நாளை முதல் இந்த 5 ராசிக்காரர்களுக்கு நல்ல நேரம் தொடங்கும்.. அதிர்ஷ்டம் அதிகம்.. பணவரவு!
May 13, 2025 06:29 AM'வெற்றியில் மிதக்கும் யோகம் உங்களுக்கா.. கவனமாக இருக்க வேண்டியது யார்' மேஷம் முதல் மீனம் வரையான ராசியினரே இன்று சாதகமா!
May 12, 2025 12:18 PMபுத்த பூர்ணிமா நாளான இன்று உருவாகும் யோகம்.. எந்த ராசிக்காரர்களுக்கு நன்மை உண்டாகும்?
May 12, 2025 05:00 AM"லாபத்தில் மிதக்கும் யோகம் யாருக்கு.. மகிழ்ச்சியில் சாத்தியமா" இன்று மே 12 உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க
May 11, 2025 02:57 PMநவ பஞ்சம ராஜ யோகம்.. இந்த 3 ராசிகளும் அதிர்ஷ்டத்தின் முகவரி.. பண ஆதாயம், வாழ்க்கையில் வெற்றி
உச்ச அதிகாரம் கொண்ட கிரகமாக நவகிரகங்களில் சூரிய பகவான் விளங்கிய வருகின்றார். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். மிதுன ராசிகள் பயணம் செய்து வந்த சூரிய பகவான் கடந்த ஜூலை 16ஆம் தேதி அன்று கடக ராசிகள் நுழைந்தார். இது சந்திர பகவானின் சொந்தமான ராசியாகும்.
அதற்கு முன்னதாகவே ஜூலை 14 ஆம் தேதி என்று சூரிய பகவான் நட்சத்திர பெயர்ச்சியில் ஈடுபட்டார். அந்த வகையில் பூச நட்சத்திரத்தில் சூரியன் தற்போது தனது பயணத்தை மேற்கொண்டு வருகிறார். இந்த நட்சத்திரத்தின் அதிபதியாக சனிபகவான் விளங்கி வருகின்றார்.
சூரிய பகவானின் பூச நட்சத்திர பயணம் ஆனது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் குறிப்பிட்ட சில ராசிகள் யோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
கடக ராசி
சூரிய பகவானின் நட்சத்திர பயணம் உங்களுக்கு நல்ல யோகத்தை பெற்றுத்தரப் போகின்றது. மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். அனைத்து விஷயங்களிலும் வெற்றி கிடைக்கும். தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும்.
திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
மிதுன ராசி
சூரிய பகவான் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றது. எதிர்பாராத நேரத்தில் நிதி ஆதாயங்கள் இருக்கும். தொழில் நல்ல முன்னேற்றம் இருக்கும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய நண்பர்களால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரக்கூடிய வாய்ப்புகள் அனைத்தும் அமையும். வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சுய வாழ்க்கையில் உங்களுக்கு ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் முடிவடையும்.
விருச்சிக ராசி
சூரிய பகவான் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு சாதகமான பலன்களை அள்ளித் தரப் போகின்றது. அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் முடிவடையும். பங்குச்சந்தை முதலீடுகள் உங்களுக்கு நல்ல லாபத்தை பெற்று தரும்.
வேலை தொடர்பான பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும். நிதி நிலைமையில் ஏற்பட்ட வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9
