தமிழ் செய்திகள்  /  Astrology  /  Let Us See About The Zodiac Signs That Get Lucky Due To Transit Of Venus

Sukran Luck: சுக்கிரன் உச்சம் சென்றார்.. 3 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்கும்

Suriyakumar Jayabalan HT Tamil
Feb 23, 2024 03:12 PM IST

சுக்கிரனின் நட்சத்திர இடமாற்றத்தால் அதிர்ஷ்டத்தை பெறுகின்ற ராசிகள் குறித்து காண்போம்.

சுக்கிர பெயர்ச்சி
சுக்கிர பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

சுக்கிர பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இந்நிலையில் சுக்கிரன் கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி அன்று மகர ராசியில் நுழைந்தார். இதனால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும்.

அதே சமயம் பிப்ரவரி 20ஆம் தேதி அன்று திருவோணம் நட்சத்திரத்திற்குள் நுழைந்தார். இது சில ராசிகளுக்கு முன்னேற்றத்தை கொடுக்கும் சில ராசிகள் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. சுக்கிரன் திருவோண நட்சத்திரத்திற்குள் நுழைந்ததால் சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

சுக்கிரன் நட்சத்திர இடம் மாற்றம் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தருகின்றது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு உண்டாகும். நீண்ட நாளான ஆசைகள் நிறைவேறும்.

தனுசு ராசி

 

சுக்கிரனின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு பணவரவை அதிகப்படுத்த போகின்றது. வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நேரம் உண்டாகும். குழந்தைகளால் நல்ல செய்தி உங்களுக்கு தேடி வரும். வீட்டில் வசதி அதிகரிக்கும். அனைத்து துறைகளிலும் வெற்றிகள் கிடைக்கும் மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும்.

கும்ப ராசி

 

சுக்கிரன் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு பல்வேறு விதமான வாய்ப்புகளை உருவாக்கி கொடுக்க உள்ளது. ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வெளிநாடு பயணங்களால் உங்களுக்கு நிதி நிலைமையில் முன்னேற்றம் இருக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சியான செய்தி உங்களை தேடி வரும். குடும்பத்தில் மங்கள காரியங்கள் நடக்கும். பணவரவில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel