Tamil News  /  Astrology  /  Let Us See About The Zodiac Signs That Get Lucky Due To Guru Transit

Guru Peyarchi: குரு உச்சகட்டம் சென்றார்.. குபேர யோக ராசிகள் இவர்கள்தான்

Suriyakumar Jayabalan HT Tamil
Feb 04, 2024 10:48 AM IST

குரு பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தை பெறும் ராசிகள் குறித்து காண்போம்.

குரு பெயர்ச்சி
குரு பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

குரு பகவானின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. ஆண்டிற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக் கூடியவர் குரு பகவான். குரு பகவான் எப்போதும் நல்லது செய்யக்கூடியவர். இடமாற்றத்தால் அவ்வப்போது அசுப பலன்களை கொடுக்கக் கூடிய சூழ்நிலை உண்டாகின்றது.

குரு பகவான் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகிறார். வருமே ஒன்றாம் தேதி அன்று ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார். இவருடைய இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் 12 ஆண்டுகளுக்கு பிறகு ரிஷப ராசிக்குள் குரு பகவான் வருகின்றார்.

குரு பகவானின் ரிஷப சஞ்சாரம் பன்னிரண்டு ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சிலர் ராசிகள் மே மாதத்தில் இருந்து அதிர்ஷ்ட யோகத்தை பெறுகின்றனர். அந்த அதிர்ஷ்ட ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

மேஷ ராசி

 

குரு பகவானின் இடமாற்றம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. அதிர்ஷ்டத்தின் ஸ்தானத்தில் குரு பகவான் இருப்பதால் உங்களுக்கு எந்த குறையும் இருக்காது. குழந்தைகள் தொடர்பான விஷயங்களில் உங்களுக்கு நல்ல செய்தி வரும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். அதிர்ஷ்டம் உங்களை தேடுகிறது. நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும்.

ரிஷப ராசி

 

குரு பகவானின் இடமாற்றம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. வருமானம் அதிகரிக்க கூடிய சூழ்நிலை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நிதி நிலைமையில் ஏற்பட்டு வந்து சிக்கல்கள் குறையும். உடல் ஆரோக்கியத்தை மிகவும் கவனித்துக் கொள்ள வேண்டும். மற்றபடி எந்த சிக்கல்களும் இருக்காது.

மிதுன ராசி

 

மங்களகரமான பலன்கள் உங்களுக்கு கிடைக்கப் போகின்றது. இந்த காலகட்டத்தில் அதிர்ஷ்டத்தின் யோகம் உங்களுக்கு கிடைக்கும். அனைத்து விஷயங்களும் உங்களுக்கு சாதகமாக அமையக்கூடிய சூழ்நிலை உண்டாகும். முன்னேற்றத்திற்கான பல வழிகள் உங்களுக்கு கிடைக்கும். நிதி நிலைமையில் நல்ல யோகங்கள் உண்டாகும். பணவரவில் எந்த குறையும் இருக்காது.

தனுசு ராசி

 

இக்கட்டான சூழ்நிலைகளை சமாளிக்கும் திறனை குருபகவான் உங்களுக்கு கொடுக்க போகின்றார். இவருடைய சஞ்சாரம் உங்களுக்கு சாதகமாக அமைய உள்ளது. மகிழ்ச்சி அதிகரிக்கும். சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். எடுத்த காரியங்கள் அனைத்தும் நடக்கும். திட்டங்கள் வெற்றிகரமாக முடிவடையும். கல்வித்துறை சம்பந்தப்பட்டவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். பணவரவில் இந்த குறையும் இருக்காது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.

டாபிக்ஸ்