தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Sani Game Start: சனி சங்கடம் தீர்ப்பார்.. பண மழையில் நனையும் ராசிகள்.. கொண்டாட்டத்தில் விழப்போவது யார்?

Sani Game Start: சனி சங்கடம் தீர்ப்பார்.. பண மழையில் நனையும் ராசிகள்.. கொண்டாட்டத்தில் விழப்போவது யார்?

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 04, 2024 10:50 AM IST

Lord Sani transit: சனி பகவான் வருகின்ற ஜூன் 29ஆம் தேதி அன்று இரவு கும்ப ராசியில் பின்னோக்கிய பயணத்தை மேற்கொள்ளப் போகிறார். இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும் ஒரு சில ராசிகளுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கப் போகின்றது. அதில் எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

சனி சங்கடம் தீர்ப்பார்.. பண மழையில் நனையும் ராசிகள்.. கொண்டாட்டத்தில் விழப்போவது யார்?
சனி சங்கடம் தீர்ப்பார்.. பண மழையில் நனையும் ராசிகள்.. கொண்டாட்டத்தில் விழப்போவது யார்?

சனி பகவான் 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்தமான ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார் இது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த 2024 ஆம் ஆண்டு சனி பகவானின் ஆண்டாக கருதப்படுகிறது வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார்.

சனி பகவான் வருகின்ற ஜூன் 29ஆம் தேதி அன்று இரவு கும்ப ராசியில் பின்னோக்கிய பயணத்தை மேற்கொள்ளப் போகிறார். இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும் ஒரு சில ராசிகளுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கப் போகின்றது. அதில் எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

சனிபகவானின் பிற்போக்கு பயணம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். நிலுவையில் உள்ள அனைத்து காரியங்களும் உங்களுக்கு வெற்றிகரமாக முடிவடையும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்களோடு உங்களுக்கு மகிழ்ச்சியான சூழ்நிலை அமையும். 

வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். மற்றவர்களிடத்தில் உங்களுடைய மரியாதை அதிகரிக்கும். உங்களுடைய வார்த்தைகளுக்கு அனைவரும் இணைந்து நடப்பார்கள்.

ரிஷப ராசி

சனிபகவானின் பின்னோக்கிய பயணம் உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றது. இதுவரை உங்களுக்கு ஏற்பட்டு வந்து சிக்கல்கள் அனைத்தும் குறையும். வேலை செய்யும் இடத்தில் ஏற்பட்ட வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். பல்வேறு விதமான வழிகளில் இருந்து உங்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும். எதிரிகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். 

புதிய முயற்சிகள் உங்களுக்கு வெற்றி தேடி தரும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். புதிய தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை சம்பந்தப்பட்ட விஷயங்களில் உங்களுக்கு சிறப்பான காலமாக அமையும்.

கன்னி ராசி

சனி பகவானின் பின்னோக்கிய பயணம் உங்களுக்கு நல்ல பலன்களை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். அனைத்து துறைகளிலும் உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். 

அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். தொழில் வாழ்க்கையில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு புதிய முதலீடுகள் நல்ல வருமானத்தை பெற்று தரும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நிதி நிலைமையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel