Lord Rahu: டிசம்பர் வரை ரத்தக்கண்ணீர்.. ராகு அடிக்கும் ராசிகள்.. உஷாராக இருப்பது நல்லது.. நீங்க என்ன ராசி?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lord Rahu: டிசம்பர் வரை ரத்தக்கண்ணீர்.. ராகு அடிக்கும் ராசிகள்.. உஷாராக இருப்பது நல்லது.. நீங்க என்ன ராசி?

Lord Rahu: டிசம்பர் வரை ரத்தக்கண்ணீர்.. ராகு அடிக்கும் ராசிகள்.. உஷாராக இருப்பது நல்லது.. நீங்க என்ன ராசி?

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 13, 2024 03:40 PM IST

Lord Rahu: ராகு பகவானின் மீன ராசி பயணம் ஆனது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை ஒரு சில ராசிகள் ராகு பகவானால் சிக்கலை சந்திக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

டிசம்பர் வரை ரத்தக்கண்ணீர்.. ராகு அடிக்கும் ராசிகள்.. உஷாராக இருப்பது நல்லது.. நீங்க என்ன ராசி?
டிசம்பர் வரை ரத்தக்கண்ணீர்.. ராகு அடிக்கும் ராசிகள்.. உஷாராக இருப்பது நல்லது.. நீங்க என்ன ராசி?

அந்த வகையில் ராகு பகவான் மீன ராசியில் பயணம் செய்ய தொடங்கினார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். சனி பகவானுக்கு பிறகும் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக ராகு பகவான் விளங்கி வருகின்றார். ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ராகு பகவான் 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். 

அந்த வகையில் ராகு பகவானின் மீன ராசி பயணம் ஆனது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை ஒரு சில ராசிகள் ராகு பகவானால் சிக்கலை சந்திக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

கன்னி ராசி

ராகு பகவான் உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் பயணம் செய்து வருகின்ற காரணத்தினால் உங்களுக்கு இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. வேலை செய்யும் இடத்தில் நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த தொழிலில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். காதல் வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. 

திருமண வாழ்க்கையில் மனக்கசப்புகள் ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் அமையும். அனைத்து விஷயங்களிலும் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். குடும்பத்தினரிடம் பேசும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நண்பர்களால் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. உறவினர்களால் உங்களுக்கு சங்கடங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது, எனவே எச்சரிக்கையாக இருங்கள்.

தனுசு ராசி

உங்கள் ராசிகள் நான்காவது வீட்டில் ராகு பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் நீங்கள் உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. தேவையில்லாத சிக்கல்கள் உங்களை தேடி வருவதற்கான சூழ்நிலைகள் அமையும். குடும்ப வாழ்க்கையில் மிகவும் மன அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். 

டிசம்பர் மாதம் வரை உங்களது நாவை கட்டுப்படுத்துவது நல்லது வார்த்தைகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் உங்களது பேச்சால் சிக்கல்கள் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. உங்கள் பேச்சை குறைத்தால் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும் எதை பேசுகிறோம் என்று தெரிந்து பேசினால் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகள் உண்டாகும்.

கும்ப ராசி

உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் ராஜபகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை செலவுகள் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. உங்களுக்கு நிதி ரீதியான சிக்கல்கள் அதிகம் ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். பணவரவில் பெரிய சிக்கல்கள் ஏற்படக்கூடும். நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. 

மற்றவர்களின் ஆலோசனைப்படி தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் அடுத்தபடி எடுத்து வைத்தால் நன்றாக இருக்கும். தேவையில்லாத செயல்கள் உங்களுக்கு சிக்கலை ஏற்படுத்தும். பெரிய நிதி இழப்பை நீங்கள் சந்திப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

 

Whats_app_banner

டாபிக்ஸ்