தமிழ் செய்திகள்  /  Astrology  /  Let Us See About The Zodiac Signs That Are Going To Suffer Due To The Intense Gaze Of Saturn

கோபத்தில் பற்றி எரியும் சனி.. சிக்கி சிதையும் ராசிகள்.. 10 மாத காலம் விட மாட்டார்

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 22, 2024 09:59 AM IST

Lord Saturn: சனிபகவான் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தில் ஏற்படுத்தும். சனிபகவானின் உக்கிர பார்வை சில ராசிகளின் மீது விழுகின்றது. இதனால் அவர்கள் சில சிரமங்களை அனுபவிக்கப் போகின்றனர்.

சனிபகவான்
சனிபகவான்

ட்ரெண்டிங் செய்திகள்

சனி பகவான் தற்போது தனது சொந்த ராசிக்கான கும்ப ராசியில் பயணம் செய்திருக்கின்றார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ராசியில் பயணம் செய்கிறார். இந்த 2024 ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். இந்த ஆண்டு சனி பகவானின் ஆண்டாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

சனிபகவான் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தில் ஏற்படுத்தும். சனிபகவானின் உக்கிர பார்வை சில ராசிகளின் மீது விழுகின்றது. இதனால் அவர்கள் சில சிரமங்களை அனுபவிக்கப் போகின்றனர். இந்த உக்கர பார்வையானது பத்து மாதங்கள் தொடர்ந்து நீடிக்கும். இதனால் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

கடக ராசி

 

சனிபகவானின் கோப பார்வையால் உங்களுக்கு சில கஷ்டங்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அலுவலகத்தில் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். வாழ்க்கையில் பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பத்து மாத காலம் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

விருச்சிக ராசி

 

சனி பகவானின் உக்கிர பார்வை உங்களுக்கு வாழ்க்கையில் பல்வேறு விதமான சண்டை மற்றும் சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும். முக்கியமாக நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பணத்தில் பற்றாக்குறை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. எதிரிகளால் அதிக தொல்லைகள் ஏற்படக்கூடும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சில சங்கடமான சூழ்நிலை உண்டாகும்.

மகர ராசி

 

உங்களுக்கு ஏழரை சனியின் கடைசி கட்டம் நடந்து கொண்டிருக்கின்றது. அது மட்டும் இல்லாமல் சனிபகவானின் உக்கிர பார்வை உங்கள் மீது விழுகின்றது. இதனால் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். சிக்கல்கள் ஏற்படக்கூடும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வேலைகள் உங்களுக்கு சில சிக்கல்களை ஏற்படுத்தும். கடின உழைப்பு மட்டுமே நல்ல பலன்களை பெற்றுத் தரும்.

கும்ப ராசி

 

உங்களுக்கு ஏழரை சனியின் கடைசி கட்டம் நடந்து கொண்டிருக்கின்றது. சனிபகவானின் கோப பார்வை உங்களுக்கு சிக்கலை ஏற்படுத்தும். சண்டை சச்சரவுகள் உங்களைத் தேடி வரும். யாரிடமாவது பேசி சிக்கல்கள் ஏற்பட்டால் அப்படியே ஒதுங்கி கொள்வது நல்லது. வாக்குவாதங்கள் பெரிய சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும். அலுவலகத்தில் மற்றவர்களிடம் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். சக ஊழியர்கள் உங்களுக்கு சாதகம் அற்ற சூழ்நிலையை உருவாக்குவார்கள். வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

 

WhatsApp channel