தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Jackpot 2024: வந்துவிட்டது லட்சுமி நாராயண யோகம்.. ஜாக்பாட் ராசிகள் இவர்கள்தான்.. உங்க ராசி இதில் இருக்கா பாருங்கள்?

Jackpot 2024: வந்துவிட்டது லட்சுமி நாராயண யோகம்.. ஜாக்பாட் ராசிகள் இவர்கள்தான்.. உங்க ராசி இதில் இருக்கா பாருங்கள்?

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 30, 2024 12:40 PM IST

Lakshmi Narayana Yoga: லட்சுமி நாராயண யோகம் ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. கடக ராசியில் உருவாகின்ற இந்த யோகத்தால் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகும் ராசிகள் குறித்து இந்த பதிவில் காணலாம்.

வந்துவிட்டது லட்சுமி நாராயண யோகம்.. ஜாக்பாட் ராசிகள் இவர்கள்தான்.. உங்க ராசி இதில் இருக்கா பாருங்கள்?
வந்துவிட்டது லட்சுமி நாராயண யோகம்.. ஜாக்பாட் ராசிகள் இவர்கள்தான்.. உங்க ராசி இதில் இருக்கா பாருங்கள்?

Jackpot 2024: ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றும் பொழுது 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கும். கிரகங்களின் இடமாற்றத்தின் பொழுது அவ்வப்போது யோகங்கள் உருவாகும். அப்படி உருவாகக்கூடிய யோகங்கள் அனைவரது வாழ்க்கையிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

சில நேரங்களில் உருவாகக்கூடிய ராஜ யோகங்கள் பல்வேறு விதமான நன்மைகளை அள்ளிக் கொடுக்கும். அந்த வகையில் சுக்கிரன் மற்றும் புதன் இவர்கள் இருவரும் சேர்கின்ற காரணத்தினால் லட்சுமி நாராயண யோகம் உருவாக்க உள்ளது. இந்த யோகம் வருகின்ற ஜூலை மாதம் கடக ராசியில் உருவாக உள்ளது. கட்டாயம் இந்த லட்சுமி நாராயண யோசனை தாக்கமானது அனைத்து ராசிகளுக்கும் இருக்கும்.

இருப்பினும் இந்த லட்சுமி நாராயண யோகம் ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. கடக ராசியில் உருவாகின்ற இந்த யோகத்தால் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகும் ராசிகள் குறித்து இந்த பதிவில் காணலாம்.

கடக ராசி

உங்கள் ராசியில் முதல் வீட்டில் லட்சுமி நாராயண யோகம் உருவாக உள்ளது. இதனால் உங்களுக்கு எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். நீங்கள் நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு அதிகம் கிடைக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை தொடர்பாக வெளியூர் பயணங்கள் செல்ல அதிக வாய்ப்பு உள்ளது. பயணங்கள் நல்ல பலன்களை பெற்று தரும். ஆளுமை தரும் அதிகரிக்கும். 

திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். நண்பர்களால் உதவி கிடைக்கும். திருமண வாழ்க்கையில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.

கன்னி ராசி

உங்கள் ராசியில் 11-ஆவது வீட்டில் லட்சுமி நாராயண யோகம் உருவாக உள்ளது இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக படைக்க உள்ளது. புத்திசாலித்தனத்தால் எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். பணத்தை சேமிப்பதற்கான சூழ்நிலைகள் அமையும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். 

நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொழில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நல்ல லாபம் கிடைக்கும். நண்பர்களால் உதவி கிடைக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். திருமணமானவர்கள் வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். உறவினர்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.

துலாம் ராசி

உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் லட்சுமி நாராயண யோகம் உருவாக உள்ளது. இதனால் உங்களுக்கு மங்களகரமான சூழ்நிலைகள் அமையும். வேலை மற்றும் வியாபாரத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறைந்து நல்ல முன்னேற்றம் உங்களுக்கு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பணிச்சுமை குறையும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். 

வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். சக ஊழியர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். எடுத்துக்கொண்ட இலக்கு வெற்றிகரமாக முடிவடையும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். நிலுவையில் உள்ள வேலைகள் உங்களுக்கு ஜாதகமாக முடிவடையும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கக்கூடும். நல்ல நிதி ஆதாயம் உங்களுக்கு கிடைக்கும். தொழில் விரிவுபடுத்தக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9