குரு சுக்கிரன் அடாவடி சேர்க்கை.. பணம் கொட்டோ கொட்டுன்னு கொட்டும் ராசிகள்.. அட தொடவே முடியாதே!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  குரு சுக்கிரன் அடாவடி சேர்க்கை.. பணம் கொட்டோ கொட்டுன்னு கொட்டும் ராசிகள்.. அட தொடவே முடியாதே!

குரு சுக்கிரன் அடாவடி சேர்க்கை.. பணம் கொட்டோ கொட்டுன்னு கொட்டும் ராசிகள்.. அட தொடவே முடியாதே!

Suriyakumar Jayabalan HT Tamil
Oct 05, 2024 12:45 PM IST

Guru Venus: அக்டோபர் 10ஆம் தேதி அன்று குரு பகவான் மேஷ ராசியில் வளைவு இயக்கத்தை மேற்கொள்ள உள்ளார். அதேசமயம் அக்டோபர் 13-ஆம் தேதி அன்று சுக்கிரன் விருச்சிக ராசிக்குள் நுழைகிறார். இந்த இரண்டு கிரகங்களும் ஏழாவது வீட்டில் சந்திக்க போகின்றனர்.

குரு சுக்கிரன் அடாவடி சேர்க்கை.. பணம் கொட்டோ கொட்டுன்னு கொட்டும் ராசிகள்.. அட தொடவே முடியாதே!
குரு சுக்கிரன் அடாவடி சேர்க்கை.. பணம் கொட்டோ கொட்டுன்னு கொட்டும் ராசிகள்.. அட தொடவே முடியாதே!

நவகிரகங்களில் ஆடம்பரன கிரகமாக விளங்க கூடியவர் சுக்கிரன். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கு மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இவர் சொகுசு ஆடம்பரம் கல்வி காதல் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.

இந்நிலையில் வருகின்ற அக்டோபர் 10ஆம் தேதி அன்று குரு பகவான் மேஷ ராசியில் வளைவு இயக்கத்தை மேற்கொள்ள உள்ளார். அதேசமயம் அக்டோபர் 13-ஆம் தேதி அன்று சுக்கிரன் விருச்சிக ராசிக்குள் நுழைகிறார். இந்த இரண்டு கிரகங்களும் ஏழாவது வீட்டில் சந்திக்க போகின்றனர். இதனால் ராஜயோகம் உருவாக உள்ளது. இதன் மூலம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மேஷ ராசி

குரு மற்றும் சுக்கிரன் ஏழாவது வீட்டில் இருக்கின்ற காரணத்தினால் உங்களுக்கு பணவரவில் எந்த குறையும் இருக்காது. வாழ்வில் அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு அற்புதமான வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பாராத நேரத்தில் நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணங்கள் உருவாகும். 

வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். புதிய பொறுப்புகள் உங்களுக்கு முன்னேற்றத்தை பெற்று தரும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வியாபாரத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். நிதி ஆதாயங்கள் உங்களுக்கு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எதிரிகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். பல்வேறு இன்பங்கள் கிடைக்கக்கூடிய காலமாக இது அமையும்.

சிம்ம ராசி

சுக்கிரன் மற்றும் குரு சேர்ந்து உங்களுக்கு நல்ல யோகத்தை கொடுக்கப் போகின்றனர். அதிக பொருள் மற்றும் இன்பங்கள் கிடைக்கக்கூடிய யோகம் உங்களுக்கு அமைந்துள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சியை மற்றும் அமைதி நிலவக்கூடும். வீட்டில் எல்லாருக்கும் மகிழ்ச்சி உண்டாகும். பணவரவில் இருந்த குறையும் இருக்காது. 

புதிய விஷயங்கள் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். வியாபாரத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறையும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.

கன்னி ராசி

சுக்கிரன் மற்றும் குரு சேர்ந்து உங்களுக்கு யோகத்தை அள்ளிக் கொடுக்கப் போகின்றனர். வாழ்க்கையில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். மகிழ்ச்சி உங்களை தேடி வரும். அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும். குழந்தைகளால் உங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி தேடி வரும். பெற்றோரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். 

வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும். வெளிநாடு செல்ல விரும்புபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். பொருளாதார ரீதியாக உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். நிதி நிலைமையில் உங்களுக்கு ஏற்பட்டு வந்து சிக்கல்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறையும். உடல் ஆரோக்கியத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner