தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lord Sani: சனி சுழற்றி சுவற்றில் அடிப்பார்.. ரத்தக்கண்ணீரில் கதறும் ராசிகள்.. தப்பிக்க வாய்ப்பே இல்ல!

Lord Sani: சனி சுழற்றி சுவற்றில் அடிப்பார்.. ரத்தக்கண்ணீரில் கதறும் ராசிகள்.. தப்பிக்க வாய்ப்பே இல்ல!

Suriyakumar Jayabalan HT Tamil
Jul 03, 2024 11:40 AM IST

Lord Sani: சனி பகவான் கடந்த ஜூன் 29ஆம் தேதி அன்று கும்ப ராசியில் வக்கிர நிலை அடைந்தார். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு சிக்கலை கொடுக்கப் போகின்றது. வருகின்ற நவம்பர் மாதம் வரை இதே நிலையில் பயணம் செய்வார்.

சனி சுழற்றி சுவற்றில் அடிப்பார்.. ரத்தக்கண்ணீரில் கதறும் ராசிகள்.. தப்பிக்க வாய்ப்பே இல்ல!
சனி சுழற்றி சுவற்றில் அடிப்பார்.. ரத்தக்கண்ணீரில் கதறும் ராசிகள்.. தப்பிக்க வாய்ப்பே இல்ல!

Lord Sani: நவக்கிரகங்களில் நீதிமானாக விளங்கக்கூடியவர் சனி பகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக் கூடியவர் சனி பகவான். ஒரு ராசியில் உச்சம் சென்றால் அவர்களுக்கு யோகத்தின் அனைத்து பலன்களும் கிடைக்கும். என கூறப்படுகிறது. சனி பகவான் கர்மநாயகனாக திகழ்ந்து வருகின்றார். நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து இரட்டிப்பாக திருப்பிக் கொடுப்பார். அதனால் சனி பகவானுக்கு என்றால் அனைவரும் அச்சப்படுவார்கள்.

சனி பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். சனி பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 30 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்தமான ராசியான கும்ப ராசியில் தற்போது பயணம் செய்து வருகிறார்.

அந்த வகையில் சனி பகவான் கடந்த ஜூன் 29ஆம் தேதி அன்று கும்ப ராசியில் வக்கிர நிலை அடைந்தார். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு சிக்கலை கொடுக்கப் போகின்றது. வருகின்ற நவம்பர் மாதம் வரை இதே நிலையில் பயணம் செய்வார். சனி பகவானால் சங்கடங்களை சந்திக்கப் போகும் ராசிகள் குறித்து இங்கு காணோம்.

ரிஷப ராசி

சனி பகவான் உங்கள் ராசிகள் பத்தாவது வீட்டில் வக்கிர நிலை அடைந்துள்ளார். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்படக்கூடும். தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் சிக்கல்கள் இருக்கும். வியாபாரத்தில் தடைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. எதிர்பார்த்த வெற்றி கிடைக்காது. கடின உழைப்பு உங்களுக்கு முன்னேற்றத்தை கொடுக்காது. 

மிகப்பெரிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைப்பதற்கு சற்று தாமதம் ஆகும். வியாபாரம் மற்றும் தொழில் கடுமையான போட்டி இருக்கும். சிலருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. நிதி நிலைமை நவம்பர் மாதம் வரை மிகவும் மோசமாக இருக்கும் எச்சரிக்கையாக இருங்கள்.

மேஷ ராசி

உங்கள் ராசிகள் 11வது வீட்டில் சனிபகவான் வக்கிர நிலையை அடைந்துள்ளார். இதனால் உங்களுக்கு சிக்கல்கள் மற்றும் சங்கடங்கள் ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் அமையும். எடுத்துக்கொண்ட காரியங்கள் முடிவதற்கு சற்று தாமதமாகும். கடின உழைப்பு உங்களுக்கு நல்ல பலன்களை தராது. 

நிதி நிலைமை மிகவும் பலவீனமாக இருக்கும். தேவையற்ற செலவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மோசமான வாழ்க்கை முறை உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்படுத்தும். உணவு பழக்க வழக்கங்கள் உங்களுக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். 

மிதுன ராசி 

உங்கள் ராசிகள் ஒன்பதாவது வீட்டில் சனி வக்கிரம் இல்லை அடைந்துள்ளார். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்த வேலை முடிப்பதற்கு சற்று தாமதமான சூழ்நிலைகள் உண்டாகும். நவம்பர் மாதம் வரை உங்களுக்கு கஷ்டங்கள் ஏற்படக்கூடும். 

எடுத்துக் கொண்ட காரியங்கள் முடிவதற்கு சட்ட தாமதமாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்தமான சூழ்நிலை இருக்கும். வேலையில்லாதவர்களுக்கும் வேலை கிடைக்க கஷ்டமான சூழ்நிலையாக இருக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கக்கூடும். இருப்பினும் உங்களுக்கு சிக்கல்கள் வருவது உறுதியாகியது

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9