தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Rahu Game: ராகு பணமழை பொழிகிறார்.. ஜாக்பாட் ராசிகள் இவர்கள்தான்.. அதிர்ஷ்டம் தேடி வருகுது!

Rahu Game: ராகு பணமழை பொழிகிறார்.. ஜாக்பாட் ராசிகள் இவர்கள்தான்.. அதிர்ஷ்டம் தேடி வருகுது!

Suriyakumar Jayabalan HT Tamil
Jul 05, 2024 05:40 PM IST

Lord Rahu: ரேவதி நட்சத்திரத்தில் இருந்த ராகு பகவான் உத்திரட்டாதி ஜூலை எட்டாம் தேதி அன்று நட்சத்திரத்தில் நுழைகின்றார். இவருடைய நட்சத்திர இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்டு சில ராசிகளுக்கு ராஜயோகத்தை கொடுக்கப் போகின்றது.

ராகு பணமழை பொழிகிறார்.. ஜாக்பாட் ராசிகள் இவர்கள்தான்.. அதிர்ஷ்டம் தேடி வருகுது!
ராகு பணமழை பொழிகிறார்.. ஜாக்பாட் ராசிகள் இவர்கள்தான்.. அதிர்ஷ்டம் தேடி வருகுது!

Lord Rahu: நவகிரகங்களில் அசுப நாயகனாக விளங்க கூடியவர் ராகு பகவான். நவகிரகங்களில் ராகு மற்றும் கேது இணைபிரியாத கிரகங்களாக திகழ்ந்து வருகின்றனர். வெவ்வேறு ராசிகளில் பயணம் செய்தாலும் ஒரே மாதிரியான செயல்பாடுகளில் ஈடுபடக் கூடியவர்கள். சனி பகவானுக்கு பிறகும் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக ராகு பகவான் விளங்கி வருகின்றார்.

ராகு பகவான் 18 மாதங்களுக்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் கடந்தாண்டு அக்டோபர் மாத இறுதியில் ராகு பகவான் மீன ராசிகள் நுழைந்தார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். ராகு பகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.