குரு கோபம் ஆகிவிட்டார்.. வக்கிரப் பெயர்ச்சியால் நஷ்டத்தை சந்திக்க போகும் 3 ராசிகள்.. உங்க ராசி என்ன?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  குரு கோபம் ஆகிவிட்டார்.. வக்கிரப் பெயர்ச்சியால் நஷ்டத்தை சந்திக்க போகும் 3 ராசிகள்.. உங்க ராசி என்ன?

குரு கோபம் ஆகிவிட்டார்.. வக்கிரப் பெயர்ச்சியால் நஷ்டத்தை சந்திக்க போகும் 3 ராசிகள்.. உங்க ராசி என்ன?

Suriyakumar Jayabalan HT Tamil
Oct 10, 2024 09:28 AM IST

Guru Bhagavan: குரு பகவானின் வக்கிரப் பெயர்ச்சி அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் கஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

குரு கோபம் ஆகிவிட்டார்.. வக்கிரப் பெயர்ச்சியால் நஷ்டத்தை சந்திக்க போகும் 3 ராசிகள்.. உங்க ராசி என்ன?
குரு கோபம் ஆகிவிட்டார்.. வக்கிரப் பெயர்ச்சியால் நஷ்டத்தை சந்திக்க போகும் 3 ராசிகள்.. உங்க ராசி என்ன?

அந்த வகையில் கடந்த மே மாதம் ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு தனது இடத்தை மாற்றினார் இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். ஒரு 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார். குரு பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் வருகின்ற அக்டோபர் ஒன்பதாம் தேதி அன்று குரு பகவான் வக்கிர பெயர்ச்சி அடைகிறார். குரு பகவானின் வக்கிரப் பெயர்ச்சி அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் கஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 

ரிஷப ராசி

குரு பகவானின் வக்கிரப் பெயர்ச்சி உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்களை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. தனிப்பட்ட உடைமைகள் மீது நீங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். பல்வேறு விதமான தடைகள் உங்களுக்கு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. சட்டத்துறையில் நீங்கள் சிக்கல்களை சந்திப்பதற்கான வாய்ப்புகள் அமையும். புதிய முதலீடுகளை தற்போது தவிர்ப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் அவ்வப்போது நஷ்டம் என்பது ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் அமையும். புதிய முதலீடுகள் செய்வதை தற்போது தவிர்ப்பது நல்லது. தகவல் தொடர்புகளை மேம்படுத்துவது உங்களுக்கு நல்லது. குடும்ப உறவுகளோடு பேசும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சுற்றி உள்ளவர்களோடு நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

கடக ராசி

குருபகவான் வக்கிரப் பெயர்ச்சி மோசமாக அமைந்துள்ளது. முதலீடு சம்பந்தமான விஷயங்களில் நீங்கள் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. நிதி ரீதியாக பல்வேறு விதமான கஷ்டங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஆன்மீக உறவுகளால் உங்களுக்கு சவாலான சூழ்நிலைகள் ஏற்படக்கூடும். எனவே நீங்கள் மிகவும் கவனமாக இருப்பது நல்லது. இந்த காலகட்டத்தில் முடிவெடுக்கும். போது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சில தவறான முடிவுகள் உங்களுக்கு பெரிய நஷ்டங்களை ஏற்படுத்தக்கூடும். வெளியூர் பயணங்கள் செல்லும்போது கவனமாக இருப்பது நல்லது. பயணத்தின் போது உங்கள் உடமைகள் மீது நீங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். பல்வேறு விதமான தடைகள் உங்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தக்கூடும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு தற்போது கிடைக்காத சூழ்நிலை உண்டாகும். குடும்பத்தினர் ரோடு பேசும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

மகர ராசி

குருபகவான் வக்கிரப் பெயர்ச்சி உங்களுக்கு எதிர்மறையான மாற்றங்களை உருவாக்கிக் கொடுக்கும். பேச்சால் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்படக்கூடிய சூழ்நிலைகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் நீங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது. பல விபத்துக்கள் ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் உங்களுக்கு உள்ளது. உடல் ஆரோக்கியத்தை பொருத்தவரை நீங்கள் அதிக கவனம் செலுத்தி பாதுகாத்துக் கொள்ள வேண்டும். குடும்பத்தினரிடம் பேசும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வெளியே செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர் வாக்குவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. சக ஊழியர்களிடம் கவனமாக இருப்பது நல்லது. திருமண வாழ்க்கையில் அவ்வப்போது சண்டை மற்றும் சச்சரவுகள் ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் அதிகம் உள்ளது.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner