தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  சனி புரட்சி செய்யப் போகிறார்.. பணத்தில் புரண்டு படுக்கப் போகும் ராசிகள்.. வாயை பிளக்க வைக்கும் அதிர்ஷ்டம்

சனி புரட்சி செய்யப் போகிறார்.. பணத்தில் புரண்டு படுக்கப் போகும் ராசிகள்.. வாயை பிளக்க வைக்கும் அதிர்ஷ்டம்

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 28, 2024 05:45 PM IST

Lord Sani: சனிபகவானின் சிறப்பான பார்வையாக விளங்கக்கூடிய மூன்றாம் பார்வை மேஷ ராசியில் பயணம் செய்து வரும் செவ்வாய் பகவானின் மீது விழுகின்றது. இதனால் குறிப்பிட்ட ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

சனி புரட்சி செய்யப் போகிறார்.. பணத்தில் புரண்டு படுக்கப் போகும் ராசிகள்.. வாயை பிளக்க வைக்கும் அதிர்ஷ்டம்
சனி புரட்சி செய்யப் போகிறார்.. பணத்தில் புரண்டு படுக்கப் போகும் ராசிகள்.. வாயை பிளக்க வைக்கும் அதிர்ஷ்டம்

சனிபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். அதனால் நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக சனி பகவான் விளங்கி வருகின்றார். 30 ஆண்டுகளுக்கு பிறகு தனக்கு சொந்தமான ராசிக்கான கும்ப ராசியில் சனிபகவான் தற்போது பயணம் செய்து வருகிறார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் சனிபகவான் பயணம் செய்வார். இது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

சனிபகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாது அவருடைய பார்வையும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் அந்த வகையில். சனிபகவானின் சிறப்பான பார்வையாக விளங்கக்கூடிய மூன்றாம் பார்வை மேஷ ராசியில் பயணம் செய்து வரும் செவ்வாய் பகவானின் மீது விழுகின்றது. இதனால் குறிப்பிட்ட ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மேஷ ராசி

சனிபகவானின் மூன்றாம் பார்வையால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். எதிர்பாராத நேரத்தில் நிதி ஆதாயங்கள் இருக்கக்கூடும். வருமான அதிகரிப்பால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். பண சிக்கல்களில் இருந்து உங்களுக்கு விடுதலை கிடைக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும். எடுத்துக் கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். குடும்பத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறித்து மகிழ்ச்சி அதிகரிக்கும்.

மிதுன ராசி

சனிபகவானின் மூன்றாம் பார்வை உங்களுக்கு சாதகமான பலன்களை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சிக்கிக்கிடந்த பணம் உங்களை வந்து சேரும். வெளிநாட்டில் இருக்கக்கூடியவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். போட்டி தேர்வுகளில் மாணவர்கள் சிறந்து விளங்குவார்கள் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். திட்டமிட்ட வேலைகள் உங்களது எண்ணப்படி சிறப்பாக நடைபெறும்.

கன்னி ராசி

உங்கள் ராசியில் சனி பகவானின் மூன்றாவது பார்வை அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. எடுத்துக் கொண்ட காரியங்கள் உங்களுக்கு சிறப்பாக முடிவடையும். வசதி மற்றும் வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு வேலை செய்யப் போகின்றது. நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் முடிவடையும். சனி பகவானின் அருளால் உங்களுக்கு எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கக்கூடும். நிதி நிலைமையில் எதிர்பாராத அளவிற்கு உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9