Lord Sani: சனி புரட்டி எடுக்க போகும் ராசிகள்.. கஷ்டத்தில் கதற போகும் ராசிகள்.. இந்த ராசி நீங்களா?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lord Sani: சனி புரட்டி எடுக்க போகும் ராசிகள்.. கஷ்டத்தில் கதற போகும் ராசிகள்.. இந்த ராசி நீங்களா?

Lord Sani: சனி புரட்டி எடுக்க போகும் ராசிகள்.. கஷ்டத்தில் கதற போகும் ராசிகள்.. இந்த ராசி நீங்களா?

Suriyakumar Jayabalan HT Tamil
Published Jul 17, 2024 12:45 PM IST

lord Sani: நவம்பர் மாதம் வரை இது நிலையில் பயணம் செய்வார். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் இருப்பினும் ஒரு சில ராசிகள் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து எங்களுக்கு காணலாம்.

சனி புரட்டி எடுக்க போகும் ராசிகள்.. கஷ்டத்தில் கதற போகும் ராசிகள்.. இந்த ராசி நீங்களா?
சனி புரட்டி எடுக்க போகும் ராசிகள்.. கஷ்டத்தில் கதற போகும் ராசிகள்.. இந்த ராசி நீங்களா?

இது போன்ற போட்டோக்கள்

நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக சனி பகவான் விளங்கி வருகின்றார். சனி பகவான் நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் இரட்டிப்பாக பிரித்துக் கொடுக்கின்ற காரணத்தினால் அவரைக் கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள்.

சனிபகவான் 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்தமான ராசியில் கும்ப ராசிகள் பயணம் செய்து வருகிறார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் செய்வார். வரும் 2025 வரை இதே ராசியில் பயணம் செய்யப் போகிறார். சனி பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் வருகின்ற ஜூன் 29ஆம் தேதி அன்று சனிபகவான் பின்னோக்கிய பயணத்தை மேற்கொள்ள உள்ளார்.

இதனால் நவம்பர் மாதம் வரை இது நிலையில் பயணம் செய்வார். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் இருப்பினும் ஒரு சில ராசிகள் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து எங்களுக்கு காணலாம்.

ரிஷப ராசி

உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் சனிபகவான் பின்னோக்கிய பயணத்தை மேற்கொள்ள உள்ளார். இதனால் உங்களுக்கு தொழிலில் சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. சிறிய வேலைகளில் கூட பெரிய தடை ஏற்படக்கூடும். எதிர்பார்த்த வெற்றி கிடைப்பதற்கு சற்று தாமதமாகும். கடின உழைப்பு பெறுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாக இருக்கும். 

வியாபாரத்தில் மந்தமான சூழ்நிலை இருக்கும். தொழிலில் கடுமையான போட்டி இருக்கும். அவ்வப்போது நஷ்டங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. நிதி நிலைமையில் உங்களுக்கு நவம்பர் மாதம் வரை பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

மேஷ ராசி

சனிபகவான் உங்கள் ராசியில் 11-வது வீட்டில் பெண் ஓகே பயணத்தை மேற்கொள்ள உள்ளார். இதனால் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைப்பதற்கு தாமதமாகும். வேலை செய்யும் இடத்தில் பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்படக்கூடும். உடன் வேலை செய்பவர்களோடு கவனமாக இருக்க வேண்டும். உயர் அலுவலர்களோடு பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 

கொஞ்சம் கடினமான சூழலாக இது இப்போது இருக்கும். வியாபாரம் மற்றும் தொழிலில் தேவையற்ற செலவுகள் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. நிதி நிலைமையில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். பெற்றோரின் உடல் ஆரோக்கியத்தில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.

மிதுன ராசி

உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சனி பகவான் பின்னோக்கிய பயணத்தை மேற்கொள்ள உள்ளார். இதனால் நீங்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பல்வேறு விதமான தடைகள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. நவம்பர் மாதம் வரை நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். கடினமான இடத்திற்கு உங்களை பணியிட மாற்றம் செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. 

நீங்கள் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உயர் அலுவலர்களோடு பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். சக ஊழியர்கள் உங்களுக்கு எதிரி போல் செயல்படுவார்கள். வேலை செய்யாவிட்டால் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. செலவுகள் அதிகரிக்கப்படும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9