தமிழ் செய்திகள்  /  Astrology  /  Let Us See About The Zodiac Signs That Are Going To Enjoy The Full Benefits Of Guru Bhagavan

Guru Bhagavan: குரு பகவானின் பணக்குவியலில் அமர போகும் ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Feb 22, 2024 10:58 AM IST

Guru Bhagavan: குருபகவானால் முழுமையான பலன்களை அனுபவிக்க போகும் ராசிகள் குறித்து காண்போம்.

குரு பெயர்ச்சி
குரு பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

குரு பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் தற்போது குரு பகவான் மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். வரும் மே ஒன்றாம் தேதி அன்று ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார்.

இது சுக்கிர பகவானின் சொந்த ராசியாகும். குரு பகவானின் இடமாற்றத்தால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் குறிப்பிட்ட சில ராசிகள் நல்ல பலன்களை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்

கடக ராசி

 

குருபகவானின் இடமாற்றம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. அனைத்து வித விதமான வேலைகளும் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். வாழ்வில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். சுப பலன்கள் குடும்பத்தில் ஏற்படும். பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். அதிக அளவில் பண வரவு இருக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.

கன்னி ராசி

 

அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். பணவரவில் எந்த குறையும் இருக்காது. சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஆதாயம் உண்டாகும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். வாழ்க்கையில் நல்ல மாற்றங்களும் உண்டாகும்.

தனுசு ராசி

 

உங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்றத்தை குரு பகவான் கொடுப்பார். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நல்ல பலன்களை தேடி வரும். புதிய திட்டங்கள் வெற்றியை தேடி தரும். நிதி ஆதாயத்திற்காக வாய்ப்புகள் அனைத்தும் உண்டாகும். வருமானம் ஈட்டுவதற்கான புதிய வழிகள் உங்களுக்கு கிடைக்கும். ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

 

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel