தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  சூரியன் பிரித்து விளையாடுகிறார்.. அதிர்ஷ்டத்தில் குதிக்கும் ராசிகள்.. ராஜாவாகப் போவது யார்?

சூரியன் பிரித்து விளையாடுகிறார்.. அதிர்ஷ்டத்தில் குதிக்கும் ராசிகள்.. ராஜாவாகப் போவது யார்?

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 17, 2024 03:13 PM IST

Surya Yoga: புதன் பகவான் சூரிய பகவானின் நட்பு கிரகங்களாக திகழ்ந்து வருகின்றார். சூரிய பகவானின் மிதுன ராசி பயணம் ஆனது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் சூரிய பகவானால் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர்.

சூரியன் பிரித்து விளையாடுகிறார்.. அதிர்ஷ்டத்தில் குதிக்கும் ராசிகள்.. ராஜாவாகப் போவது யார்?
சூரியன் பிரித்து விளையாடுகிறார்.. அதிர்ஷ்டத்தில் குதிக்கும் ராசிகள்.. ராஜாவாகப் போவது யார்?

Surya Yoga: நவகிரகங்களின் உச்ச அதிகாரம் கொண்ட கிரகமாக சூரியன் விளங்கி வருகின்றார். அது ஒரு மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சூரிய பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசுக்கு செல்லும் போது தமிழ் மாதம் பிறக்கின்றது. இவர் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார்.

நவகிரகங்களின் தலைவனாக விளங்கி வரும் சூரிய பகவான் ரிஷப ராசியில் பயணம் செய்து வந்தார். கடந்த ஜூன் 15-ம் தேதி அன்று புதன் பகவானின் சொந்தமான ராசிக்கான மிதுன ராசியில் நுழைந்தார்.

புதன் பகவான் சூரிய பகவானின் நட்பு கிரகங்களாக திகழ்ந்து வருகின்றார். சூரிய பகவானின் மிதுன ராசி பயணம் ஆனது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் சூரிய பகவானால் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மிதுன ராசி

உங்கள் ராசியில் முதல் வீட்டில் சூரியன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். மற்றவர்கள் இடத்தில் மரியாதை அதிகரிக்கும் சிறப்பான பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். திருமணம் ஆனவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கக்கூடும்.

சிம்ம ராசி

உங்கள் ராசியில் 11 வது வீட்டில் சூரியன் பயணம் செய்து வருகின்றார். அதனால் உங்களுக்கு வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படக்கூடும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். முன்னேற்றத்திற்கான சூழ்நிலைகள் உங்களுக்கு அமையும். குழந்தை தொடர்பான செயல்களில் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். அரசியல் தொழிலில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். பணவரவில் இந்த குறையும் இருக்காது.

கன்னி ராசி

உங்கள் ராசிகள் பத்தாவது வீட்டில் சூரியன் பயணம் செய்து வருகின்றார். அதனால் உங்களுக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் சாதகமான பலன்கள் கிடைக்கக்கூடும் வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். மேலும் வணிகத்தில் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கக்கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நண்பர்களால் உதவி கிடைக்கும். உறவினர்களால் ஏற்பட்ட வந்து சிக்கல்கள் அனைத்தும் குறையும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9