தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lord Surya: சூரியன் யோகத்தில் உச்சத்தை அடையப்போகும் ராசிகள்.. பணத்தில் விளையாடுவது உறுதியானது

Lord Surya: சூரியன் யோகத்தில் உச்சத்தை அடையப்போகும் ராசிகள்.. பணத்தில் விளையாடுவது உறுதியானது

Suriyakumar Jayabalan HT Tamil
Jul 05, 2024 03:11 PM IST

Lord Surya: புதன் பகவானின் சொந்தமான ராசியான மிதுன ராசியில் பயணம் செய்து வரும் சூரிய பகவானால் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகளுக்கு யோகம் கிடைக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

சூரியன் யோகத்தில் உச்சத்தை அடையப்போகும் ராசிகள்.. பணத்தில் விளையாடுவது உறுதியானது
சூரியன் யோகத்தில் உச்சத்தை அடையப்போகும் ராசிகள்.. பணத்தில் விளையாடுவது உறுதியானது

Lord Surya: நவகிரகங்களின் உச்ச அதிகாரம் கொண்ட கிரகமாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். சூரிய பகவான் தலைமை பொறுப்பை வகித்து வருகிறார். சூரிய பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சூரிய பகவான் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். சூரிய பகவான் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார்.

அந்த வகையில் ரிஷப ராசியில் பயணம் செய்து வந்த சூரிய பகவான் கடந்த ஜூன் 15ஆம் தேதியன்று மிதுன ராசியில் நுழைந்தார். இது புதன் பகவானின் சொந்தமான ராசியாகும். புதன் பகவானின் சொந்தமான ராசியான மிதுன ராசியில் பயணம் செய்து வரும் சூரிய பகவானால் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகளுக்கு யோகம் கிடைக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மிதுன ராசி

உங்கள் ராசியில் முதல் வீட்டில் சூரியன் பயணம் செய்து வருகின்றார். அதனால் உங்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கப்படும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். தொழிலில் சிறப்பான பலன்கள் கிடைக்கும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். 

திருமணமானவர்களின் வாழ்க்கையில் யோகம் உண்டாகும். பணவரவில் இருந்து குறையும் இருக்காது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். உறவினர்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.

சிம்ம ராசி

உங்கள் ராசியில் 11 வது வீட்டில் சூரியன் பயணம் செய்து வருகின்றார். இதனால் வருமானத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய சூழ்நிலைகள் அமையும். வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். 

முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். குழந்தைகளால் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். அரசியல் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். உறவினர்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.

கன்னி ராசி

உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் சூரியன் பயணம் செய்து வருகின்றார். இதனால் தொழில் மற்றும் வியாபாரத்தில் சாதகமான பலன்கள் கிடைக்கும். வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உங்களுக்கு சிறப்பான பலன்களை அள்ளிக் கொடுக்கும். தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் இருக்கும். முக்கியமான முடிவுகளால் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். 

நிதி நிலைமையில் வலுவான யோகங்கள் கிடைக்கும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அனைத்தும் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கப்படும். விரும்பிய இடமாற்றம் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9