Mercury: புதன் புரட்டி எடுக்க போகும் ராசிக்காரர்கள் இவர்கள்தான்
புதன் பகவானால் சிரமப்பட போகும் ராசிகள் குறித்து காண்போம்.
நவகிரகங்களில் இளவரசனாக விளங்கக் கூடியவர் புதன் பகவான். இவர் கல்வி, அறிவு, புத்தி கூர்மை, நரம்பு, வியாபாரம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக விளங்கி வருகின்றார். மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர் புதன் பகவான்.
இவருடைய இடமாற்றம் மிகப்பெரிய தாக்கத்தை பன்னிரண்டு ராசிகளுக்கும் ஏற்படுத்தும். இவர் மிதுன மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். புதன் பகவான் தற்போது சனி பகவானின் சொந்த ராசியான மகர ராசியில் பயணம் செய்து வருகிறார்.
இந்நிலையில் இதே ராசியில் கடந்த பிப்ரவரி எட்டாம் தேதி அன்று அஸ்தமனம் ஆனார். தொடர்ந்து ஒரு மாத காலத்திற்கு இதே நிலையில் பயணம் செய்வார். புதன் பகவானின் அஸ்தமனம் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
மிதுன ராசி
உங்கள் ராசிகள் எட்டாவது வீட்டில் புதன் பகவான் அஸ்தமனமாகியுள்ளார். இதனால் உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் சில சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்படும். கூட்டு வணிகத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வியாபாரத்தில் அதிக போட்டிகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வேலை செய்யும் இடத்தில் மன அழுத்தம் ஏற்படக்கூடும். நிதி இழப்புகள் ஏற்படக்கூடிய சூழ்நிலை உண்டாகும் எனவே கவனமாக இருப்பது நல்லது.
சிம்ம ராசி
உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் புதன் அஸ்தமனம் ஆகியுள்ளார். இதனால் உங்களுக்கு பணம் இழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பெரிய முதலீடுகளை தற்போது தவிர்ப்பது நல்லது. வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்க சற்று தாமதமாகும். வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சக ஊழியர்களோடு வாக்குவாதம் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது எச்சரிக்கையாக இருங்கள்.
மேஷ ராசி
உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் புதன் பகவான் அஸ்தமனம் ஆகியுள்ளார். இதனால் உங்களுக்கு வேலை செய்யும் இடத்தில் சில சங்கடங்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. சக ஊழியர்களோடு பேசும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். எந்த முடிவுகளை எடுத்தாலும் யோசித்து எடுப்பது நல்லது. உயர் அலுவலர்களோடு கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் அவ்வப்போது நஷ்டங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9