Lord Mercury: புதன் பகவானால் சிரமம் அனுபவிக்கும் ராசிக்காரர்கள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lord Mercury: புதன் பகவானால் சிரமம் அனுபவிக்கும் ராசிக்காரர்கள்

Lord Mercury: புதன் பகவானால் சிரமம் அனுபவிக்கும் ராசிக்காரர்கள்

Suriyakumar Jayabalan HT Tamil
Published Feb 08, 2024 05:49 PM IST

புதன் பகவானால் சிரமப்பட போகுது ராசிகள் குறித்து காண்போம்.

புதன் பெயர்ச்சி
புதன் பெயர்ச்சி

இது போன்ற போட்டோக்கள்

நவகிரகங்களில் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக் கூடியவர் புதன் பகவான். இவருடைய இடமாற்றம் மிகப்பெரிய பாதிப்பை பன்னிரண்டு ராசிகளுக்கும் ஏற்படுத்தும். புதன் பகவான் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார்.

புதன் பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளின் வாழ்விலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது. புதன் பகவான் தனுசு ராசியில் பயணம் செய்து வந்தார். கடந்த பிப்ரவரி ஒன்றாம் தேதி அன்று சனி பகவானின் சொந்த ராசியான மகர ராசியில் நுழைந்தார்.

இவருடைய இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெற்றுள்ளன. சில ராசிகள் அசுப பலன்களை பெறுகின்றனர். அவ்வாறு புதன் பகவானால் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

கடக ராசி

 

புதன் பகவான் உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் சஞ்சாரம் செய்து வருகின்றார். உங்களுக்கு செலவுகள் அதிகரிக்க கூடிய சூழ்நிலை உண்டாகும். பணம் செலவழிக்க வேண்டிய தருணங்கள் இருக்கும். மதிப்புமிக்க பொருட்களின் மீது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

பயணங்கள் செய்யும்போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உங்கள் உடமைகள் மீது கவனமாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் மன உளைச்சல் ஏற்படக்கூடிய சூழ்நிலை உண்டாகும். பதவி உயர்வு மற்றும் இடமாற்றம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வியாபாரத்தில் சற்று கவனமாக இருப்பது நல்லது.

சிம்ம ராசி

 

புதன் பகவான் உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் நுழைந்துள்ளார். உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும் வேலை செய்யும் இடத்தில் பல்வேறு விதமான சவால்கள் வரக்கூடும்.

உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குடும்ப உறுப்பினர்களால் சிக்கல்கள் ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது. வீட்டில் சங்கடங்கள் ஏற்படும். தினமும் விஷ்ணு பகவானை வழிபட்டால் நன்மைகள் உண்டாகும் என கூறப்படுகிறது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9