தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  பிரகாசமான வாழ்க்கை பெறும் ராசிகள்.. சூரியன் குதித்து விட்டார்.. அதிர்ஷ்டத்தை அனுபவிக்கும் ராசிகள்

பிரகாசமான வாழ்க்கை பெறும் ராசிகள்.. சூரியன் குதித்து விட்டார்.. அதிர்ஷ்டத்தை அனுபவிக்கும் ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 16, 2024 05:20 PM IST

Surya Bhagavan: சூரிய பகவானின் மிதுன ராசி பயணமானது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் அதிர்ஷ்டத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.

பிரகாசமான வாழ்க்கை பெறும் ராசிகள்.. சூரியன் குதித்து விட்டார்.. அதிர்ஷ்டத்தை அனுபவிக்கும் ராசிகள்
பிரகாசமான வாழ்க்கை பெறும் ராசிகள்.. சூரியன் குதித்து விட்டார்.. அதிர்ஷ்டத்தை அனுபவிக்கும் ராசிகள்

சூரிய பகவான் சுக்கிரனின் ரிஷப ராசியில் பயணம் செய்து வந்தார். கடந்த ஜூன் 15ஆம் தேதி அன்று அதாவது நேற்று புதன் பகவானின் மிதுன ராசியில் நுழைந்தார். சூரிய பகவானின் மிதுன ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

சூரிய பகவானின் மிதுன ராசி பயணமானது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் அதிர்ஷ்டத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.

மிதுன ராசி

 

உங்கள் ராசியில் முதல் வீட்டில் சூரிய பகவான் பயணம் செய்கின்றார். இதனால் உங்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கப்படும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். 

குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உறவினர்களால் உங்களுக்கு முன்னேற்றம் இருக்கும். நண்பர்களால் உதவி கிடைக்கும். திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும் காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள்.

சிம்ம ராசி

 

உங்கள் ராசியில் 11 வது வீட்டில் சூரியன் பயணம் செய்து வருகின்றார். இதனால் வருமானத்தில் உங்களுக்கு நல்ல உயர்வு கிடைக்கப் போகின்றது. புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொழில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். 

தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய முயற்சிகள் வெற்றியை தேடி தரும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கப்படும். குழந்தை தொடர்பான சில விஷயங்களில் உங்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். அரசியலில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். சூரிய பகவானின் அருள் ஆசி உங்களுக்கு சிறப்பாக கொடுக்கப் போகின்றது.

கன்னி ராசி

 

உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் சூரியன் பயணம் செய்து வருகின்றார். இதெல்லாம் உங்களுக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சாதகமான பலன்கள் உங்களுக்கு கிடைக்கப் போகின்றது. வேலை மற்றும் வியாபாரத்தில் உங்களுக்கு லாபகரமான செயல்கள் நடக்கப் போகின்றது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். 

நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வணிகத்தில் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறப்பான பலன்கள் இருக்கும். திருமண வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் அனைத்தும் குறையும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9