தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Money Luck: பண அறையில் பூட்டப் போகும் சுக்கிரன்.. யோகத்தில் குதித்த ராசிகள்.. உச்சத்தில் பறப்பது யார்?

Money Luck: பண அறையில் பூட்டப் போகும் சுக்கிரன்.. யோகத்தில் குதித்த ராசிகள்.. உச்சத்தில் பறப்பது யார்?

Suriyakumar Jayabalan HT Tamil
Jul 09, 2024 10:35 AM IST

Lord Venus: சுக்கிரன் கடந்த ஜூன் 30-ம் தேதி அன்று மிதுன ராசியில் உதயமானார். சுக்கிரனின் உதயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சிலர் ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

பண அறையில் பூட்டப் போகும் சுக்கிரன்.. யோகத்தில் குதித்த ராசிகள்.. உச்சத்தில் பறப்பது யார்?
பண அறையில் பூட்டப் போகும் சுக்கிரன்.. யோகத்தில் குதித்த ராசிகள்.. உச்சத்தில் பறப்பது யார்?

சுக்கிர பகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். அசுரர்களின் குருவாக திகழ்ந்து வரக்கூடிய சுக்கிரன் கடந்த ஜூன் 30-ம் தேதி அன்று மிதுன ராசியில் உதயமானார். சுக்கிரனின் உதயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சிலர் ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

துலாம் ராசி

உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சுக்கிரன் உதயமாகியுள்ளார். இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை கிடைக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உங்களுடைய ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். 

வீட்டில் மங்கள காரியங்கள் நடக்கும் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி காண்பார்கள். மேல்படிப்புக்காக வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும் காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

கன்னி ராசி

உங்கள் ராசிகள் பத்தாவது இடத்தில் சுக்கிரன் உதயமாகியுள்ளார். இதனால் உங்களுக்கு வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். நீங்கள் எடுக்க முடிவுகள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். நிதி நிலைமையில் உங்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்கள் அனைத்தும் குறையும். 

பொருளாதாரத்தில் உங்களுக்கு முன்பு இருந்தது விட தற்போது முன்னேற்றம் இருக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழிலை இழிவுபடுத்தக் கூடிய வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.

ரிஷப ராசி

உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் சுக்கிரன் உதயம் ஆகி உள்ளார். இதனால் உங்களுக்கு எதிர்பாராத நேரத்தின் மீது ஆதாயங்கள் இருக்கும். அரசு வேலை முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பரம்பரை சொத்துக்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதிவு உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். 

பேச்சு திறமையால் காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். திட்டமிட்ட வேலைகள் உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கும். உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9