தமிழ் செய்திகள்  /  Astrology  /  Let Us See About The Zodiac Signs That Are Blessed By Lord Mars

Lord Mars: செவ்வாய் பணமழை பொழிய போகுது.. அதிர்ஷ்டக்காரர் ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 06, 2024 02:56 PM IST

செவ்வாய் பகவானால் அதிர்ஷ்டத்தை பெறுகின்ற ராசிகள் குறித்து காண்போம்.

செவ்வாய் பெயர்ச்சி
செவ்வாய் பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். செவ்வாய் பகவான் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார்.

செவ்வாய் பகவானின் நான்காவது பார்வை சில ராசிகளுக்கு நல்ல யோகத்தை பெற்றுத் தரப் போகின்றது. தற்போது மகர ராசியில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார். செவ்வாய் பகவானின் செயலால் அதிர்ஷ்டத்தை பெறப்போகும். ராசிகளை இங்கே காண்போம்.

மேஷ ராசி

 

செவ்வாய் பகவான் உங்கள் ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். உங்களுக்கு நான்காம் பார்வை நல்ல யோகத்தை கொடுக்கும். தைரியம், வீரம் மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்க கூடும். வருமானத்தில் இருந்த குறையும் இருக்காது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. புதிய வருமானம் அதிகரிக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். பணவரவுகள் எந்த குறையும் இருக்காது.

கடக ராசி

 

செவ்வாய் பகவான் உங்களுக்கு நல்ல யோகத்தை தர போகின்றார். வியாபாரத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நிதி நிலைமையில் நல்ல லாபம் கிடைக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வியாபாரம் விரிவாகும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பொது துறையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

சிம்ம ராசி

 

உங்கள் ராசிகள் செவ்வாய் பகவான் அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றார். நிலுவையில் இருந்து வேலைகள் அனைத்தும் முடிவடையும். வழக்கத்தை விட மன தைரியம் மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும். வியாபாரம் மற்றும் தொழிலில் லாபம் இரு மடங்காக கிடைக்கும். சேமிப்பு அதிகரிக்க கூடும் வீட்டில் மங்கள காரியங்கள் நடக்கும். மொத்தத்தில் உங்களுக்கு அருமையான காலமாக அமையும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel