Money Yogam: போட்டு தாக்க போகும் செவ்வாய்.. பணம் கொட்டும்.. ராஜ ராசிகள்.. எந்த ராசிகள் இதில் இருக்காங்க..-let us see about the zodiac signs ruled by lord mars for good progress in life - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Money Yogam: போட்டு தாக்க போகும் செவ்வாய்.. பணம் கொட்டும்.. ராஜ ராசிகள்.. எந்த ராசிகள் இதில் இருக்காங்க..

Money Yogam: போட்டு தாக்க போகும் செவ்வாய்.. பணம் கொட்டும்.. ராஜ ராசிகள்.. எந்த ராசிகள் இதில் இருக்காங்க..

Suriyakumar Jayabalan HT Tamil
Aug 07, 2024 05:43 PM IST

Lord Mars: செவ்வாய் பகவானின் இடமாற்றமானது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஒரு சில ராசிகளுக்கு மாற்றங்களை ஏற்படுத்தி கொடுக்கப் போகின்றார். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து காணலாம்.

போட்டு தாக்க போகும் செவ்வாய்.. பணம் கொட்டும்.. ராஜ ராசிகள்.. எந்த ராசிகள் இதில் இருக்காங்க..
போட்டு தாக்க போகும் செவ்வாய்.. பணம் கொட்டும்.. ராஜ ராசிகள்.. எந்த ராசிகள் இதில் இருக்காங்க..

செவ்வாய் பகவான் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றத்தால் பன்னிரண்டு ராசிகளும் முழுமையான பலன்களை பெறுவார்கள். செவ்வாய் பகவான் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாக திகழ்ந்த வருகின்றார்.

மங்களநாயகனாக விளங்கக்கூடிய செவ்வாய் பகவான் ஜூலை 12ஆம் தேதி அன்று ரிஷப ராசியில் நுழைந்தார். வருகின்ற ஆகஸ்ட் 26 ஆம் தேதி வரை இதே ராசியில் பயணம் செய்வார். அதற்கு பிறகு செவ்வாய் பகவான் மிதுன ராசியில் நுழைகின்றார். செவ்வாய் பகவானின் இடமாற்றமானது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஒரு சில ராசிகளுக்கு மாற்றங்களை ஏற்படுத்தி கொடுக்கப் போகின்றார். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து காணலாம்.

மேஷ ராசி

செவ்வாய் பகவானின் இடமாற்றம் உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் நிகழ்ந்துள்ளது. உங்கள் காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். எடுத்துக்கொண்ட காரியங்கள் வெற்றிகரமாக முடிவடையும். வியாபாரம் மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். 

வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். எதிரிகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும்.

ரிஷப ராசி

செவ்வாய் பகவான் உங்கள் ராசியில் முதல் வீட்டில் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். பணவரவில் எந்த குறையும் இருக்காது. நிதி நிலைமையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். வருமானம் அதிகரிக்கும். வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும் வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். 

குடும்பத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். திருமண வாழ்க்கையில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். சக ஊழியர்களால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.

கடக ராசி

செவ்வாய் பகவான் உங்கள் ராசியில் 11 ஆம் வீட்டில் பயணம் செய்து வருகின்றார். எதனால் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கப் போகின்றது. காதல் வாழ்க்கை உங்களுக்கு சிறப்பாக இருக்கும். திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். உங்கள் உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வாழ்க்கை துணையால் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களால் உங்களுக்கு முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். 

அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். பணகரவில் இந்த குறையும் இருக்காது. வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் ஆனவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவால் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். எதிரிகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். புதிய முயற்சிகள் உங்களுக்கு வெற்றியை தேடி தரும். நண்பர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9