Tamil News  /  Astrology  /  Let Us See About The Zodiac Signs In Which Saturn And Sun Are Sitting And Giving Luck

Sani and Suriyan: சனியோடு கைகோர்க்கும் சூரியனால் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Feb 04, 2024 09:47 AM IST

Saturn and Sun: சனியும் சூரியனும் அமர்ந்து அதிர்ஷ்டம் கொடுக்கப் போகும் ராசிகள் குறித்து காண்போம்.

சனி மற்றும் சூரியன்
சனி மற்றும் சூரியன்

ட்ரெண்டிங் செய்திகள்

செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை கொடுக்கும் சனி பகவான் தற்போது கும்ப ராசியில் பயணம் செய்து வருகிறார். வரும் 2025 வரை இதே ராசியில் பயணம் செய்வார். இதனால் 12 ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும்.

நவகிரகங்களின் தலைவனாக திகழ்ந்துவரும் சூரிய பகவான் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக் கூடியவர் இவருடைய இடமாற்றத்தினால் பல்வேறு விதமான பலன்கள் 12 ராசிகளுக்கும் கிடைக்கும் கடந்த ஜனவரி 15ஆம் தேதி அன்று சூரிய பகவான் மகர ராசியில் நுழைந்தார்.

இந்நிலையில் சூரிய பகவான் தற்போது சனிபகவானின் சொந்த ராசியான கும்ப ராசியில் நுழைகின்றார். இந்த நிகழ்வு வரும் பிப்ரவரி மாதம் தொடக்கத்தில் நிகழ உள்ளது. அதே சமயம் சனி பகவானும் கும்ப ராசிகள் பயணம் செய்து வருகின்றார். இருவரும் ஒரே ராசியில் இணைய உள்ளனர்.

சனி மற்றும் சூரியன் கும்ப ராசியில் இணைகின்ற காரணத்தினால் 12 ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும் இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

சிம்ம ராசி

 

சனி மற்றும் சூரியன் சேர்க்கை உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. சூரிய பகவான் உங்கள் ராசியில் இருந்து ஏழாவது வீட்டில் சஞ்சாரம் செய்ய உள்ளார். அதனால் உங்களுக்கு திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். வாழ்க்கை துணையால் முன்னேற்றம் உண்டாகும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய முயற்சிகள் வெற்றி தரும். வேலை மாற்றத்திற்கான முயற்சிகள் வெற்றியில் முடியும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். புதிய சாதனை படைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

தனுசு ராசி

 

சூரிய பகவான் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றார். சனி மற்றும் சூரியன் சேர்க்கை உங்களுக்கு ஜாதகரீதியாக முன்னேற்றத்தை கொடுக்கப் போகின்றது. தன்னம்பிக்கை அதிகரித்து நல்ல பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். தந்தை வழி பூர்வீக சொத்துக்களால் உங்களுக்கு ஆதாயம் உண்டாகும். உறவினர்களால் உங்களுக்கு உதவி கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும். புதிய முயற்சிகள் நல்ல லாபத்தை பெற்று தரும்.

கும்ப ராசி

 

சனிபகவானின் சஞ்சாரம் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கும். சூரிய பகவானின் இடமாற்றம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. தன்னம்பிக்கை அதிகரிக்க கூடும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். பயணம் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகமாகும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். வருமானம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். புதிய முயற்சிகள் உங்களுக்கு ஏற்றவாறு அமையும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.