தமிழ் செய்திகள்  /  Astrology  /  Let Us See About The Zodiac Signs In Which Lord Venus Is Going To Enjoy Royal Life

மீனத்தில் அமர போகும் சுக்கிர பகவான்.. அதிர்ஷ்டத்தை அள்ளப் போகும் ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Feb 03, 2024 11:34 AM IST

Lord Venus: சுக்கிர பகவானால் ராஜ வாழ்க்கையை அனுபவிக்கப் போகும் ராசிகள் குறித்து காண்போம்.

சுக்கிர பகவான்
சுக்கிர பகவான்

ட்ரெண்டிங் செய்திகள்

புதன் பகவானை போலவே மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர் சுக்கிரன். இவருடைய ராசி மாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த நிலையில் சுக்கிர பகவான் தற்போது தனுசு ராசியில் பயணம் செய்து வருகின்றார். பிப்ரவரி மாதத்தில் மகர ராசியில் பயணம் செய்வார். அதன் பின்னர் மார்ச் மாதத்தில் மீனம் ராசிக்கு இடம் மாறுகிறார்.

சுக்கிரன் உச்ச ராசியான மீன ராசிக்கு ஒரு மார்ச் 31ம் தேதி அன்று இடம் மாறுகிறார். அனைத்து கிரகங்களின் இடமாற்றமும் மிகப்பெரிய தாக்கத்தை அனைத்து ராசிகளுக்கும் ஏற்படுத்தும். அதேபோல சுக்கிர பகவானின் இடமாற்றமும் அனைத்து ராசிகளுக்கும் மாற்றத்தை கொடுக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மிதுன ராசி

 

அப்புறம் உங்களுக்கு சாதகமாக அமைய உள்ளார். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு வருமானம் அதிகரிக்க கூடிய சூழ்நிலை உண்டாகும். குடும்பத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பெற்றோரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

கன்னி ராசி

 

சுக்கிர பகவான் உங்களுக்கு நல்ல பலன்களை அள்ளிக் கொடுக்கப் போகின்றார். பண பலன்கள் உங்களுக்கு அதிகமாக கிடைக்கும். பண வரவில் எந்த குறையும் இருக்காது.. தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் இருந்து சிக்கல்கள் அனைத்தும் விலகும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். அது மட்டுமல்லாமல் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடிய சூழ்நிலை உண்டாகும். மகிழ்ச்சிக்கு எந்த குறையும் இருக்காது.

கடக ராசி

 

சுக்கிரன் உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சஞ்சாரம் செய்யப் போகின்றார். அரசியல் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பளம் உயர்வு கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. திடீரென்று நீங்கள் அரசியல் வாழ்க்கையில் நுழைவதற்கான வாய்ப்புகள் அதிகமாக கிடைக்கும். பெரிய தலைவர்களின் அறிமுகம் உங்களுக்கு கிடைக்கும். மரியாதை உங்களை தேடி வரும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.