Lord Sani: சனி புகுந்து விளையாடுகிறார்.. பண புதையலில் விழும் ராசிகள்.. அமர்வது யார்?
Lord Sani: ஜூன் 30-ம் தேதி அன்று சனி பகவான் கும்ப ராசியில் பின்னோக்கிய பயணத்தை மேற்கொள்ள உள்ளார். வக்கிர நிலையில் பயணம் செய்யும் சனி பகவானின் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும் நவம்பர் மாதம் வரை குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கொட்டப் போகின்றது.
Lord Sani: நவகிரகங்களில் கர்மநாயகனாக விளங்கக் கூடியவர் சனி பகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை இரட்டிப்பாகத் திருப்பிக் கொடுக்கக் கூடியவர். நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக சனி பகவான் விளங்கி வருகின்றார். நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து கர்ம வினைகளை இரட்டிப்பாக திருப்பிக் கொடுக்கின்ற காரணத்தினால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள்.
சனிபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். சனிபகவான் தற்போது தனது சொந்தமான ராசியான கும்பராசிகள் பயணம் செய்து வருகிறார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார் வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார். இந்த 2024 ஆம் ஆண்டு சனிபகவானின் சொந்த ஆண்டாக கருதப்படுகிறது. அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில் ஜூன் 30-ம் தேதி அன்று சனி பகவான் கும்ப ராசியில் பின்னோக்கிய பயணத்தை மேற்கொள்ள உள்ளார். வக்கிர நிலையில் பயணம் செய்யும் சனி பகவானின் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும் நவம்பர் மாதம் வரை குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கொட்டப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
ரிஷப ராசி
உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் சனி பகவான் பின்னோக்கிய பயணத்தை மேற்கொள்ளார். இதனால் உங்களுக்கு வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் முடிவடையும். ஜூலை மாத தொடக்கத்தில் இருந்து உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். எதிர்பாராத நேரத்தில் நிதி ஆதாயம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். பெற்றோரின் உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். எதிர்பார்த்த காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக நடைபெறும்.
மேஷ ராசி
உங்கள் ராசியில் 11 வது வீட்டில் சனி பகவான் பின்னோக்கிய பயணத்தை மேற்கொள்ளார். இதனால் உங்களுக்கு மங்களகரமான யோகம் உருவாகியுள்ளது. வருமானத்தில் பெரிய அதிகரிப்பு இருக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். பங்குச் சந்தை முதலீடுகள் உங்களுக்கு நல்ல லாபத்தை பெற்று தரும். உறவினர்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். நண்பர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள்.
மகர ராசி
உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் சனிபகவான் பின்னோக்கிய பயணத்தை மேற்கொள்ள உள்ளார். இதனால் உங்களுக்கு ஜூலை மாதத்தில் இருந்து அதிர்ஷ்டம் கிடைக்கப் போகின்றது. பேச்சுத் திறமையால் காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். தொழிலில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வாழ்க்கை துணைவினால் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். குழந்தைகளால் உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும். சிக்கிக்கிடந்த பணம் உங்களை தேடி வரும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டாகும்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9