தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  பணத்தில் உள்நீச்சல் போடும் ராசிகள்.. புதன் விளையாட்டு ஆரம்பம்.. நீங்க என்ன ராசி பார்க்கலாமா?

பணத்தில் உள்நீச்சல் போடும் ராசிகள்.. புதன் விளையாட்டு ஆரம்பம்.. நீங்க என்ன ராசி பார்க்கலாமா?

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 26, 2024 03:11 PM IST

Lord Mercury: புதன் பகவானின் கடக ராசி பலன் ஆனது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. ஜூலை 19 வரை புதன் பகவான் இதே ராசியில் பயணம் செய்கின்ற காரணத்தினால் ராஜயோகத்தை அனுபவிக்கும் ராசிகள் குறித்து காண்போம்.

பணத்தில் உள்நீச்சல் போடும் ராசிகள்.. புதன் விளையாட்டு ஆரம்பம்.. நீங்க என்ன ராசி?
பணத்தில் உள்நீச்சல் போடும் ராசிகள்.. புதன் விளையாட்டு ஆரம்பம்.. நீங்க என்ன ராசி?

Lord Mercury: நவகிரகங்களில் இளவரசன் பதவியை வகித்து வருபவர் புதன் பகவான். இவர் நரம்பு, வியாபாரம், புத்திசாலித்தனம், படிப்பு, பேச்சு, உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். 27 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் புதன் பகவான்.

புதன் பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றுகின்ற காரணத்தினால் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை புதன் பகவான் ஏற்படுத்துவார். புதன் பகவான் கன்னி மற்றும் மிதுன ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார்.

ரிஷப ராசியில் பயணம் செய்து வந்த புதன் பகவான் ஜூன் 14ஆம் தேதி அன்று மிதுன ராசியில் பயணம் செய்ய தொடங்கினார். தற்போது வரை இதே ராசியில் பயணம் செய்கிறார். வருகின்ற ஜூன் 29ஆம் தேதி அன்று கடக ராசிக்கு செல்கிறார். இது சந்திர பகவானின் சொந்தமான ராசியாகும்.

புதன் பகவானின் கடக ராசி பலன் ஆனது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. ஜூலை 19 வரை புதன் பகவான் இதே ராசியில் பயணம் செய்கின்ற காரணத்தினால் ராஜயோகத்தை அனுபவிக்கும் ராசிகள் குறித்து காண்போம்.

துலாம் ராசி

உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்யப் போகின்றார். இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் முடிவடையும். நீண்ட தூர பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். புதன் பகவானின் இடமாற்றம் சாதகமான பலன்களை கொடுக்கப் போகின்றது. வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் உங்களுக்கு கிடைக்கும். திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். உடல் ஆரோக்கியத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். உறவினர்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.

மிதுன ராசி

உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்யப் போகின்றார். இதனால் உங்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். நல்ல நிதி ஆதாயம் உங்களுக்கு கிடைக்கும். வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் உங்களுக்கு ஏற்றவாறு நடக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தை பொறுத்த வரை உங்களுக்கு ஏற்பட்ட வந்து சிக்கல்கள் அனைத்தும் குறைந்து முன்னேற்றம் இருக்கும்.

மேஷ ராசி

உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்யப் போகின்றார். இதனால் உங்களுக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறைந்து பல்வேறு விதமான நன்மைகள் உங்களுக்கு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வியாபாரத்தில் நிறைய லாபம் உங்களுக்கு கிடைக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் உங்களுக்கு கிடைக்கும். நிதி நிலைமையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறைந்து நல்ல முன்னேற்றம் இருக்கும். கடன் சிக்கல்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் உங்களுக்கு குறையும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9