Rahu Ketu: ராகு கேது பகவானால் யோகம் பேரும் ராசிகள்-let us see about the zodiac sign people who get yoga from lord rahu ketu - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Rahu Ketu: ராகு கேது பகவானால் யோகம் பேரும் ராசிகள்

Rahu Ketu: ராகு கேது பகவானால் யோகம் பேரும் ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Feb 04, 2024 11:55 AM IST

ராகு கேது பகவானால் யோகத்தை பெறும் ராசிக்காரர்கள் குறித்து காண்போம்.

ராகு கேது பெயர்ச்சி
ராகு கேது பெயர்ச்சி

சனி பகவானுக்கு பிறகும் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக இவர்கள் விளங்கி வருகின்றனர். ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல இவர்கள் 18 மாதங்கள் எடுத்துக் கொள்கின்றனர். அதனால் இவர்களை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். ராகு மற்றும் கேது கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் இடம் மாறினார்கள்.

ராகு பகவான் மீன ராசியிலும் கேது பகவான் கன்னி ராசியிலும் பயணம் செய்து வருகின்றனர். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார்கள். இவர்களுடைய ராசி மாற்றம் மட்டுமல்லாது நட்சத்திர மாற்றமும் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் ராகு பகவான் ரேவதி நட்சத்திரத்தின் மூன்றாம் கட்டத்திலும், கேது பகவான் சித்திரை நட்சத்திரத்தில் முதல் கட்டத்திலும் கடந்த ஜனவரி 1ஆம் தேதி அன்று நுழைந்தனர். இதனால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் அதிர்ஷ்டத்தை பெறுகின்ற ராசிகளை காண்போம்.

ரிஷப ராசி

 

இந்த ஆண்டு முழுவதும் உங்களுக்கு ராஜபகவான் சிறப்பான பலன்களை கொடுப்பார். வருமானத்திற்கு எந்த குறையும் இல்லாமல் பார்த்துக் கொள்வார். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். வாழ்வில் செழிப்பான மாற்றம் உண்டாகும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்றுத்தரும். வணிக துறையில் மேன்மை உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். அதேசமயம் வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது.

துலாம் ராசி

ராகு மற்றும் கேது பகவானின் முழு பழங்களும் உங்களுக்கு கிடைக்கப் போகின்றது. இது சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். எதிரிகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். வீட்டில் மங்கள காரியங்கள் நடக்கும். நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும்.

கும்ப ராசி

 

சனிபகவான் பயணம் செய்து வரும் கிரகத்தில் ராகு பகவான் பல்வேறு விதமான நன்மைகளை கொடுக்கப் போகின்ற பண பலம் அதிகரிக்கும். திடீரென்று எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களுக்கு தேடி வரும். பேச்சு திறமையால் செல்வாக்கு அதிகரிக்கும். எந்த போட்டி தேர்வுகளிலும் மாணவர்கள் சிறப்பாக விளங்குவார்கள். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வருமானத்திற்கு எந்த குறையும் இருக்காது. முன்னேற்றத்தில் ஏற்பட்டிருந்த தடைகள் குறையும்.

மேஷ ராசி

 

குடும்ப வாழ்க்கையில் வேறுபட்டு வந்த சிக்கல்கள் குறையும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். வாழ்க்கை துணையால் முன்னேற்றம். உண்டாகும் திருமணத்தில் ஏற்பட்டு வந்த தடைகள் குறையும். கூட்டுத் தொழில் முயற்சிகள் முன்னேற்றம் அடையும். அதிர்ஷ்டத்தில் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறையும். நிதி நிலைமையில் முன்னேற்றம் உண்டாகும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9