தமிழ் செய்திகள்  /  Astrology  /  Let Us See About The Zodiac Sign People Who Get Lucky Due To The Setting Of Lord Saturn

Sani Action: சனி அஸ்தமனம் தரும் யோகம்.. கோடீஸ்வரர் ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Feb 07, 2024 12:38 PM IST

Saturn Transit: சனிபகவான் அஸ்தமனத்தால் அதிர்ஷ்டத்தை பெறுகின்ற ராசிக்காரர்கள் குறித்து காண்போம்.

சனி பெயர்ச்சி
சனி பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

நவகிரகங்களில் சனி பகவான் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக விளங்கி வருகிறார். சனிபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். இது 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

சனிபகவான் தற்போது கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். இது இவருடைய சொந்த ராசியாகும். சனிபகவான் வரும் பிப்ரவரி 11ஆம் தேதி அன்று கும்ப ராசியில் அஸ்தமனம் ஆகின்றார். மார்ச் 26 வரை இதே நிலையில் பயணம் செய்வார். இந்த இடைப்பட்ட காலத்தில் கட்டாயம் 12 ராசிகளுக்கும் தாக்கம் இருக்கும். அந்த வகையில் சுப பலன்களை பெறப்போகும் ராசிகளை இங்கே காண்போம்.

மிதுன ராசி

 

சனிபகவான் உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் அஸ்தமனமாக போகின்றார். உங்களுக்கு பல்வேறு விதமான சிறப்புகள் கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். கூடுதல் வருமானம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வியாபாரத்தில் ஈடுபடுபவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும்.

கடக ராசி

 

சனி பகவான் உங்கள் ராசியில் எட்டாவது வீட்டில் அஸ்தமனமாக போகின்றார். அனைத்து விதமான செயல்களும் உங்களுக்கு சாதகமாக அமையும். வேலை செய்யும் இடத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். புதிய வேலை வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். புதிய திட்டத்திற்கான முயற்சிகள் வெற்றியாக முடிவடையும். நிதி ஆதாயத்திற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்க கூடும். வாழ்க்கைத் துணையால் ஆதரவு அதிகரிக்கும்.

சிம்ம ராசி

 

சனி பகவானின் அஸ்தமனம் உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் நிகழ உள்ளது காரிய வெற்றிகள் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல செய்தி உங்களை தேடி வரும். வெளியூர் பயணங்கள் நல்ல பலன்களை பெற்றுத் தரும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். நிலம் சம்பந்தப்பட்ட தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.