Tamil News  /  Astrology  /  Let Us See About The Zodiac Sign People Who Get Benefits From Rahu Ketu Nakshatra Change

Rahu Ketu: நட்சத்திர யோகத்தை கொடுக்கும் ராகு கேது..பணவரவில் மகிழ்ச்சியாக போகும் ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Feb 01, 2024 01:47 PM IST

ராகு கேது நட்சத்திர மாற்றத்தால் பலன்களை பெறுகின்ற ராசிக்காரர்கள் குறித்து காண்போம்.

ராகு கேது
ராகு கேது

ட்ரெண்டிங் செய்திகள்

இவர்களைக் கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். ஆனால் இடமாற்றத்தை பொறுத்து நன்மைகளையும் செய்வார்கள். 18 மாதங்களுக்கு ஒரு முறை தங்களது இடத்தை மாற்றக்கூடியவர்கள் ராகு மற்றும் கேது. இவர்களுடைய இட மாற்றம் பன்னிரண்டு ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

ராசி மற்றும் மட்டுமல்லாது நட்சத்திர மாற்றமும் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் அந்த வகையில் ராகு பகவான் ரேவதி நட்சத்திரத்திலும், கேது பகவான் சித்திரை நட்சத்திரத்திலும் ஜனவரி 1ஆம் தேதி அன்று நுழைந்தனர். இவர்களுடைய இடமாற்றத்தால் பலன்களை பெறுகின்ற ராசிகளை இங்கே காண்போம்.

மேஷ ராசி

 

குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். ராகு கேது இடமாற்றத்தால் சிக்கல்கள் அனைத்தும் விலகும். கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கூட்டுத் தொழில் முயற்சிகள் முன்னேற்றமடையும். வாழ்க்கை துணையின் ஆதரவால் உங்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் இருக்கும். பொருளாதாரத்தில் நல்ல வளர்ச்சி கிடைக்கும்.

ரிஷப ராசி

 

இந்த ஆண்டு உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். வருமானத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். நீண்ட நாட்கள் நிலுவையில் இருந்த தொகைகள் உங்களைத் தேடி வரும். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். மேலும் வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது.

கும்ப ராசி

 

ராகு பகவானால் உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கப் போகின்றது. உங்களுக்கு சாதகமான சூழ்நிலை உண்டாகும். பணத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். பேச்சுத் திறமையால் செல்வாக்கு அதிகரிக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். நீங்கள் எடுக்கும் முடிவுகள் உங்களுக்கு சாதகமாக அமையும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வருமானத்திற்கு எந்த குறையும் இல்லாமல் இருக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.