முரட்டு அடி கொடுக்க வருகிறார் சூரியன்.. சிக்கிக்கொண்ட ராசிகள்.. தப்பிப்பது கொஞ்சம் கஷ்டம்-let us see about the zodiac sign people who are going to suffer from lord surya - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  முரட்டு அடி கொடுக்க வருகிறார் சூரியன்.. சிக்கிக்கொண்ட ராசிகள்.. தப்பிப்பது கொஞ்சம் கஷ்டம்

முரட்டு அடி கொடுக்க வருகிறார் சூரியன்.. சிக்கிக்கொண்ட ராசிகள்.. தப்பிப்பது கொஞ்சம் கஷ்டம்

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 24, 2024 11:52 AM IST

Lord Surya: சூரிய பகவான் கடந்த மார்ச் 14ஆம் தேதி அன்று மீன ராசியில் நுழைந்தார். மீன ராசியில் ஏற்கனவே ராகு பகவான் பயணம் செய்து வருகின்றார். புதன் பகவானும் மீன ராசியில் ஆட்சி செய்து வருகிறார். இந்நிலையில் ராகு பகவானோடு சூரிய பகவான் சேர்ந்துள்ளார்.

சூரிய பெயர்ச்சி
சூரிய பெயர்ச்சி

சூரிய பகவான் கடந்த மார்ச் 14ஆம் தேதி அன்று மீன ராசியில் நுழைந்தார். மீன ராசியில் ஏற்கனவே ராகு பகவான் பயணம் செய்து வருகின்றார். புதன் பகவானும் மீன ராசியில் ஆட்சி செய்து வருகிறார். இந்நிலையில் ராகு பகவானோடு சூரிய பகவான் சேர்ந்துள்ளார். 

சூரிய பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகள் சில சிக்கலான சூழ்நிலையில் அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

கடக ராசி

 

சூரிய பகவானின் இடமாற்றம் உங்களுக்கு சிக்கலை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. எனவே மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதிக கவனம் செலுத்தி உங்கள் சிக்கல்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம். வேலை செய்யும் இடத்தில் பல்வேறு விதமான போட்டிகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. புதிய திட்டங்களை தற்போது தவிர்ப்பது நல்லது. பங்குதாரர்களோடு சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. திருமண வாழ்க்கையில் அவ்வப்போது சண்டைகள் ஏற்படக்கூடும். வாழ்க்கை துணையால் சிக்கல்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

துலாம் ராசி

 

சூரிய பகவானால் உங்களுக்கு எதிலும் திருப்தி கிடைக்காத சூழ்நிலை உண்டாகும். உங்களுடைய ஆசைகள் நிறைவேறுவதற்கு சற்று தாமதமாக புதிய முதலீடுகளை தற்போது தவிர்ப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரம் சற்று மந்தமாக இருக்கும். புதிய திட்டங்களை தற்போது தவிர்ப்பது நல்லது. உங்களுடைய திட்டங்களை யாரிடமும் கூறாதீர்கள். உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வாழ்க்கை துணையோடு பேசும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

தனுசு ராசி

 

உங்களுக்கு கலவையான பலன்கள் சூரிய பகவானால் கிடைக்கப் போகின்றது. உங்களுக்கு ஆன்மீகம் ஆர்வம் அதிகரிக்கும். தனிப்பட்ட வாழ்க்கையில் சில சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வேலைகள் முடிவடைவதற்கு சற்று தாமதமாகும். குழந்தைகளால் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. கணவன் மனைவிக்கிடையே சண்டைகள் ஏற்படுவதற்கான சூழ்நிலை அமையும். சில விஷயங்கள் உங்களை கடுமையாக பாதிக்கும். உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

மகர ராசி

 

மீன ராசிகள் சூரிய பகவான் நுழைந்த காரணத்தினால் உங்களுக்கு சில சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மற்றவர்களிடம் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். வார்த்தைகள் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உங்களுடைய மன நிலைமையில் அதிக கவனம் செலுத்தி சீராக நடந்து கொள்ள வேண்டும். உடன் பிறந்தவர்கள் சிக்கல்கள் ஏற்படாதீங்க வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. நிதி இழப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. கடன் சிக்கல்களில் மாட்டிக் கொள்ளக் கூடிய சூழ்நிலை உண்டாகும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9