Lord Rahu: ராகுவிடம் சிக்கிக்கொண்ட ராசிகள் இவர்கள்தான்
ராகு பகவானிடம் கஷ்டப்படப் போகும் ராசிக்காரர்கள் குறித்து காண்போம்.
நவகிரகங்களில் அசுப கிரகமாக விளங்க கூடியவர் ராகு பகவான். இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர். சனிபகவானுக்கு பிறகும் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக விளங்கி வருகின்றார். ராகு பகவான் தனக்கென சொந்த ராசி இல்லாமல் இருக்கக்கூடியவர்.
ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ராகு பகவான் 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் ராகு பகவான் மீன ராசியில் நுழைந்தார்.
இது குருபகவானின் ராசியாகும் இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் ராகு பகவான் பயணம் செய்ய உள்ளார் வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை ராகு பகவான் மாற்றுகிறார். ராகு பகவானின் இடமாற்றத்தால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் குறிப்பிட்ட சில ராசிகள் சிக்கலை சந்திக்க போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
கன்னி ராசி
ராகு பகவானின் தாக்கம் உங்கள் ராசிகளில் இருக்கின்ற காரணத்தினால் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்படாதீங்க வாய்ப்பு உள்ளது. நண்பர்களால் ஏற்படக்கூடிய சிக்கல்கள் அதிகமாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்படக்கூடும். காரியத்தடைகள் ஏற்படக்கூடும். காதல் வாழ்க்கையில் சில சிக்கல்கள் ஏற்படும். குடும்ப வாழ்க்கையில் ஏற்ற தாழ்வுகள் இருக்கக்கூடும். உறவினர்களால் சிக்கல்கள் ஏற்படும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
தனுசு ராசி
ராகு பகவானால் நீங்கள் சற்று கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. உங்கள் வாழ்க்கையில் பல்வேறு விதமான வசதி குறைபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. உங்கள் ராசிகள் நான்காவது வீட்டில் ராகு பகவான் இருக்கின்றார். இதனால் உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தை சிறப்பு கவனம் செலுத்தி பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அலட்சியமாக இருப்பதை தவிர்க்க வேண்டும். நிதி நிலைமையில் ஏற்ற இறக்கங்கள் இருந்து கொண்டே இருக்கும். இது சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சில முக்கியமான முடிவுகள் எடுக்கும் போது அதிக ஆலோசனை செய்ய வேண்டும்.
கும்ப ராசி
ராகு பகவானால் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது வாழ்க்கையில் பல்வேறு விதமான செலவுகள் ஏற்படக்கூடும். நிதி நிலைமையில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பயணம் செல்லும் போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உங்கள் உடமைகள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். உங்கள் வாழ்க்கையில் பணம் இழப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. குடும்ப உறுப்பினர்களிடம் பேசும்போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் எதிர்மறையான மாற்றங்கள் ஏற்படக்கூடிய சூழ்நிலை உண்டாகும்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9