Sun Transit: சூரியனின் யோக வாழ்க்கையை பெறும் ராசிகள்-let us see about the zodiac sign people who are going to get sun lord yoga - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Sun Transit: சூரியனின் யோக வாழ்க்கையை பெறும் ராசிகள்

Sun Transit: சூரியனின் யோக வாழ்க்கையை பெறும் ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 25, 2024 05:21 PM IST

sun transit: சூரிய பகவான் கொட்டும் யோகத்தை பெறப் போகின்ற ராசிக்காரர்கள் குறித்து காண்போம்.

சூரிய பகவான்
சூரிய பகவான்

சூரிய பகவானின் இடமாற்றத்தின் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது. அந்த வகையில் ஜனவரி 15ஆம் தேதி அன்று அதாவது பொங்கல் தினத்தன்று சூரிய பகவான் மகர ராசிக்குள் நுழைந்தார். இது மற்ற மாணவர்களின் மகர சங்கராந்தி என கொண்டாடப்படுகிறது நமது தமிழ்நாட்டில் பொங்கல் திருநாளாக கொண்டாடப்படுகிறது.

சூரிய பகவான் ஜனவரி 24ஆம் தேதி அன்று அதாவது நேற்று திருவோணம் நட்சத்திரத்தில் பயணிக்கத் தொடங்கியுள்ளார். இவருடைய நட்சத்திர இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் வரும் பிப்ரவரி 7ஆம் தேதி வரை இதே நிலையில் பயணிக்க உள்ளார். இவருடைய இடமாற்றத்தால் 12 ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும், குறிப்பிட்ட சில ராசிகள் யோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

சூரிய பகவான் உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றார். பணவரவில் இந்த குறையும் இருக்காது. நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வாழ்க்கை துணையின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். காதல் வாழ்க்கையில் எந்த சிக்கல்களும் ஏற்படாது. திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும் உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.

சிம்ம ராசி

 

சூரிய பகவான் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றார். பண வரவில் எந்த குறையும் இருக்காது. மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். இதுவரை ஏற்பட்டு வந்த தடங்கல்கள் அனைத்தும் குறையும் வாழ்க்கை துணையுடன் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும்.

தனுசு ராசி

 

சூரிய பகவான் உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றார். சூரிய பகவானின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். தொழில் மற்றும் வணிகத்தில் நன்மைகள் அதிகமாக கிடைக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9