சனியோடு கடிவாளத்தை பிடித்த ராகு.. இனி பறக்க போகும் ராசிகள் நீங்கதான்.. உங்க ராசி இந்த லிஸ்டில் இருக்கா பாருங்கள்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  சனியோடு கடிவாளத்தை பிடித்த ராகு.. இனி பறக்க போகும் ராசிகள் நீங்கதான்.. உங்க ராசி இந்த லிஸ்டில் இருக்கா பாருங்கள்!

சனியோடு கடிவாளத்தை பிடித்த ராகு.. இனி பறக்க போகும் ராசிகள் நீங்கதான்.. உங்க ராசி இந்த லிஸ்டில் இருக்கா பாருங்கள்!

Suriyakumar Jayabalan HT Tamil
Published Oct 16, 2024 05:24 PM IST

Raja Yoga:

சனியோடு கடிவாளத்தை பிடித்த ராகு.. இனி பறக்க போகும் ராசிகள் நீங்கதான்.. உங்க ராசி இந்த லிஸ்டில் இருக்கா பாருங்கள்!
சனியோடு கடிவாளத்தை பிடித்த ராகு.. இனி பறக்க போகும் ராசிகள் நீங்கதான்.. உங்க ராசி இந்த லிஸ்டில் இருக்கா பாருங்கள்!

இது போன்ற போட்டோக்கள்

இவர் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல இரண்டு அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். அந்த வகையில் தற்போது சனி பகவான் ஒரு 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார். சனி பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

நவகிரகங்களில் அசுப நாயகனாக விளங்க கூடியவர் ராகு பகவான். இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ராகுபகவான் 18 மாதங்களுக்கு ஒரு முறை தனது ராசியை மாற்றக்கூடியவர். சனி பகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக ராகு பகவான் விளங்கி வருகின்றார்.

அந்த வகையில் கடந்த அக்டோபர் மூன்றாம் தேதி அன்று ராகு பகவான் சதயம் நட்சத்திரத்தில் நுழைந்தார் இது சனி பகவானின் சொந்தமான நட்சத்திரமாகும். சனி பகவான் ஏற்கனவே அதே நட்சத்திரத்தில் பயணம் செய்து வருகின்றார். இதனால் ஒரே நட்சத்திரத்தில் சனி மற்றும் ராகு இருவரும் ஒன்று சேர்ந்துள்ளனர். ராகு மற்றும் சனி இவர்களின் சேர்க்கை அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் ராஜயோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மகர ராசி

சனி மற்றும் ராகு சதய நட்சத்திர பயணத்தால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கப் போகின்றது. எதிர்பார்த்ததை விட உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கக்கூடும். செல்வத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். கடன் சிக்கல்கள் இருந்து விடுதலை கிடைக்கும். நிலுவையில் உள்ள பணம் உங்கள் கைகள் வந்து சேரும். 

புதிய முடிவுகள் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். குடும்ப வாழ்க்கை உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கையில் இழந்த நிம்மதி உங்களை வந்து சேரும். குடும்பத்தினரால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். நண்பர்களால் உதவி கிடைக்கும். வீட்டில் மங்கள காரியங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

துலாம் ராசி

சனி ராகு சதய நட்சத்திர பயணத்தால் உங்களுக்கு ராஜயோகம் மற்றும் அனுகூலமான பலன்கள் கிடைக்கப் போகின்றது. எதிர்பாராத நேரத்தில் உங்களுக்கு நல்ல பலன்களை கிடைக்கும். உங்கள் ராசியில் ஐந்தாவது வீட்டில் இருவரும் சந்திக்கின்ற காரணத்தினால் உங்களுக்கு பல்வேறு விதமான பலன்கள் கிடைக்கப் போகின்றது. கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். 

திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதிவு உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். சக ஊழியர்களால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வீட்டில் மங்கள வாரியங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வாழ்க்கை உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.

மிதுன ராசி

சனி மற்றும் ராகு சேர்ந்து உங்களுக்கு வீட்டின் அதிர்ஷ்ட கதவை தட்டுகின்றனர். இதனால் உங்களுக்கு ராஜயோகம் கிடைத்து வரும். வேலை செய்யும் இடத்தில் எதிர்பாராத மாற்றங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும். பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்தக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். 

வணிகத்தின் நல்ல முன்னேற்றம் இருக்கும் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமண வாழ்க்கை உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். நண்பர்களால் உதவி கிடைக்கும். உறவினர்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.